பக்கம்:ஆண்டாள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

41


போதெல்லாம் எம்பெருமானையும் சேர்த்துக் கான வேண்டுமென்னும் அவா என்னைப் பிடித்து உந்துகிறதே! இவள் அழகுக்கும் அமைப்பிற்கும் அவனன்றிப் பொருத்தமுடையார் வேறு யார்? இக்கொடியைத் தக்க கொம்புடன் யான் சேர்க்க வேண்டுமே, இல்லையெனில் எம் இருவர் வாழ்க்கையும் பயனற்றதாகுமே! இம்மாணிக்கக் கொடிக்கு அம் மரகதக் கொம்பன்றோ ஏற்றது? இவ்விரண்டையும் ஒன்றுபடுத்த யான் யாது புரிய வேண்டும்?" என ஆழ்வார் ஆழ எண்ணுகின்றார்.53 (எஸ். கிருஷ்ணவேணி அம்மையார் வில்லி புத்தூர் விளக்கு, ப. 31).

இறுதியில் ஆண்டவனின் கருணையை எண்ணி, 'களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றில்லேன்' என அவனையே சரணடைந்தார்.


ஆண்டாள் ஆற்றாமை

காறை பூணும் கண்ணாடி காணும்தன்
கையில் வளைகுலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும்தன்
கொவ்வைச் செவ் வாய்திருத்தும்54

-பெரியாழ்வார் திருமொழி 3 : 7–8

எனப் பெரியாழ்வார் தம் திருமொழியில் மொழிவன நமக்கு ஆண்டாளின் ஆற்றாமையை எடுத்துரைக்கும் சான்றாகின்றது. இந்நிலையில் இருவருமே இறைவனுடைய வருகையை எதிர் நோக்குகின்றனர். திருமாலைச் சென்றடைந்து அவனோடு இருப்பு கொள்ளவே ஆண்டாள் அப்போதும் எப்போதும் விருப்புற்றார்.

பெருமானைக் காணவும், அவனோடு இருந்து உறவாடவும் உள்ளம் விழைகின்றது; உடலும் அதற்கேற்பக் குழைகின்றது.

ஆ. ---3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/43&oldid=957614" இலிருந்து மீள்விக்கப்பட்டது