உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்மை பயக்குமெனின்

31

நடராஜன் வந்தான்.

“அண்ணாச்சிக்கு ஏதோ புஸ்தகம் வேணுமாம். எடுத்துக் கொண்ணாந்து குடு.”

பெயர் எல்லாம் எழுதிக் கொடுத்துப் பையனை அனுப்பியாகி விட்டது.

“பொறவு, நான் போயிட்டு வாரேன்.”

“என்ன அதுக்குள்ளே! வெத்திலை போடுங்க. நம்ம சவுந்தரம் இருக்கானே, அவன் ஒரு 100 ரூபா வாங்கினான். இப்போ, அப்போ என்கிறான். நீங்க கொஞ்சம் பார்க்கணும்.”

“நான் கண்டிக்கிறேன். அந்த மாதிரி இருக்கலாமா? போயிட்டு வாரேன்” என்று விடை பெற்றுக் கொண்டார்.

பூவையாப் பிள்ளை பணத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டு முன், எண்ணினார். அதிகமாக இருந்தது. கொண்டு போய்க் கொடுத்து விடலாமே என்று நினைத்தார். “அவராக வரட்டுமே; என்ன இவ்வளவு கவலை ஈனம்” என்று நினைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.

அன்று முழுவதும் சட்டைநாதப் பிள்ளை வரவில்லை. இரண்டு நாள் பார்த்துக் கொண்டு, பாங்கிக்கு அனுப்பலாம் என்று நினைத்துச் சும்மாயிருந்தார்.

சாயங்காலம் நடராஜன் புஸ்தகத்தைக் கொண்டு வந்தான்.

பிள்ளையவர்கள் அதைக் கொண்டு கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றிப் பேசவில்லை.

II

இரண்டு நாளாயிற்று.

சட்டைநாத பிள்ளைக்குப் புஸ்தகம் வாங்கப் பணம் தேவையாக இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தார். ஒரு நூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. ஒரு வேளை, தவறுதலாகக் கொடுத்து விட்டோமோவென்று பூவையாப் பிள்ளையிடம் சென்றார். கேட்டவுடன் அவர் வெகு சாந்தமாக, “இல்லையே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/32&oldid=1694353" இலிருந்து மீள்விக்கப்பட்டது