உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனி ஒருவனுக்கு

41

பிள்ளையவர்களுக்கு எப்படியோ தெரிந்து விட, “பயலை அப்படியே புடம் போட்டு விடுகிறேன் பார்” என்று இரைந்து கொண்டு, பண்ணை ஆட்களைத் திரட்டி வந்தார்.

கூட்டத்தைத் தூரத்தில் கண்டவுடன், அந்தர்த்தியானமாவது தவிர, வேறு வழியில்லை என்று கண்ட சாமியார் நடையைத் தட்டி விட்டார். அம்மாசியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார்கள். அன்று பட்ட நரக வேதனைக்கு மேல், ஆறு மாத கடுங்காவல்.

சில சந்தர்ப்பங்களில் சிறை வாசம் ஒரு புகழைக் கொடுக்கும். சமுதாயத்தில் ஒரு மகத்தான ஸ்தானத்தைக் கொடுக்கும். அம்மாசியின் சிறை வாசம் அந்த ரகத்தைச் சேர்ந்ததல்ல.

சிறையை விட்டு வெளியேறியவுடன், அம்மாசி சொந்த ஊருக்குச் செல்லவில்லை. நியாயத்தின் முடிவைக் கண்டு பிடித்த அந்த மகான் இருக்கும் திருப்பதிக்கு—இந்த சண்டாளன்; இந்த பதிதன், இந்த சமூகத் துரோகி, புழு, செல்ல முடியுமா?

விலை சரசமான காவிக் கட்டி இருக்கும் பொழுது, சோற்றுக்குப் பஞ்சமா என்று பட்டது. உடனே அம்மாசிச் சாம்பான், ஏழை அமாவாசைப் பரதேசியானார்.

தாயுமானவரையும், குதம்பைச் சித்தரையும் தப்பும், தவறுமாக உச்சரிக்க எங்குதான் கற்றுக் கொண்டாரோ? முதலில் பக்கத்து ஊரில் முகாம் போட்டார். வீட்டுக்கு முன் வந்து நின்றால், இரண்டில் ஒன்று தீர்மானமாகத் தெரிந்தாலொழியப் போவதில்லை.

கொஞ்ச நாள் கவலையற்ற சாப்பாடு.

2

ரு மாதத்திற்கு முன்தான், ஏழை அம்மாவாசி சுவாமியாரின் வழியாக இறந்து போன தாயுமானவர், கடவுளின் பரிபூரணானந்தத்தை எங்கள் ஊர்த் தெரு வழியாக வாரி இறைத்துக் கொண்டிருந்தார். ஊரைக் கவர்ச்சிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. நூற்றியோராவது பிச்சைக்காரனாகத்தான் கவலையற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/42&oldid=1694401" இலிருந்து மீள்விக்கப்பட்டது