உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பறிமுதல்

43 நெ. கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக, அரசாங்கம் முடிவு கட்டி விட்டது. ஆனால் அவனைப் பார்த்தால், அப்படித் தோன்றாது. இயற்கைச் சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால், அது 43 நெ. கைதி.

அவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்காக அல்லாமல், காற்று வருவதற்கு மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால் புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக் கூடுமென்று பயந்தோ என்னவோ, அதிலும் இரும்புக் கம்பி.

இந்தத் தனிமையில் ஒருவனுக்குப் பித்துப் பிடிக்காமல் இருந்தால், அவன் மன உறுதியை என்னவென்று கூறுவது!

வாரத்திற்கு ஒரு முறை (தவறுதலாகவோ என்னவோ) அவனது சிநேகிதியைப் பார்க்க அனுமதித்தார்கள். அதுதான் காரணம், அவன் அந்தச் சிறையிலிருந்து ஒரு அற்புதமான கிரந்தத்தை எழுத.

தூக்குத் தண்டனை அனுபவிக்க இன்னும் பதினைந்து நாட்கள். இன்னும் ஒரு முறை வருவான். கிரந்தம் உலகத்திற்குப் போய் விடும். அதற்கு மேல் சாந்தி. வேறு என்ன வேண்டும்?

அந்தச் சின்ன அறையில் இரகசியங்களை மானசீகமாகத் தவிர, வைத்துக் காப்பாற்ற முடியுமா?

ஜெயில் சூப்பிரண்ட் பரமேசுவரத்திற்கு, திடீரென்று சோதனை போடவேண்டும் என்று பட்டது. மகாத்மா “எனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/55&oldid=1694447" இலிருந்து மீள்விக்கப்பட்டது