பக்கம்:ஆண் சிங்கம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்பதிவதற்காகத் தணிவதுபோல் ஒரு குழப்பம்.அது நீங்குவதற்குச் சில நிமிஷங்கள் பிடித்தன. தெளிவு ஏற்பட்ட பிறகுகூட அவரது உடல் நடுக்கம் தீர்ந்துவிட வில்லை.

அவர் உள்ளே சென்று வேருெரு விளக்கை எடுத்து ஏற்றிக்கொண்டு வெளியே வந்தார். அப்பொழுது தெருவில் காலடி ஓசை கேட்கவும் அவருக்குத் திக்திக் கென்றது. யாரது? என்று கத்தினர் அவர். கூப்பாடாக வெடித்த அக்கேள்வி அவர் குரலை விசித்திர மானதாக ஒலிபரப்பியது.

அதனால் திகைப்படைந்த வண்டிக்காரன், என்ன எசமான், நான்தான்–மாணிக்கம்! என்று அறிவித்தான்.

‘நீ வந்துட்டியா!’ இதில் அவருக்கு ஏற்பட்ட ஆனந்தம் நன்கு ஒலி செய்தது. ‘நல்ல வேளை, இப்பவாவது வந்து சேர்ந்தியே!’ என்ற அர்த்தம் தொனித்தது. என்ன, சாப்பாடெல்லாம் ஆச்சுதா?’ என்று கேட்டு வைத்தார் அவர். பேசவேண்டும்–பேச்சுக் குரலைக் கேட்கவேண்டும்– என்ற துடிப்பு அவருக்கு.

‘நீ உள்ளே வரும்பொழுது வாசல் பக்கமாக ஒரு பன்றி போச்சுதா? தடியாய், உயரமாய், கொழு கொழு என்று...’

பண்ணையாரின் கேள்வி மாணிக்கத்தின் ஆச்சர்ய உணர்வையும் திகைப்பையும் அதிகப்படுத்தியது. ‘பன்றியா? இங்கே எதுவும் வரலியே, எசமான்!’ என் றான் அவன். ‘காம்பவுண்டின் கம்பிக் கதவு அடைத்தே தான் கிடந்தது. உள்ளே சிறு நாய்கூட வந்திருக்க முடியாது, எசமான்’ என்றும் உறுதியாகச் சொன்னான் அவன்.

‘உம், உம்’ என்று முனகினார் பண்ணையார். சில தினங்களாகத் தனக்கு நேர்ந்த அனுபவங்களை–தன் வாழ்க்கையில் பூத்துவிட்ட விசித்திரத்தை–பற்றி அவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித் தார் அவர். பலத்த ஆலோசனைக்குப் பிறகு, மிகுந்த

67