பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கிற கருத்தும் பரவியது. இல்விதமெல்லாம் தமிழர்களை ஏமாற்றி தங்கள் ஆசாரங்களையும் தீய ஒழுக்கங்களை எல் லாம் ஏற்றுக்கொள்ளும்படி ஆரியர் செய்தனர். அவ்வகை ஏற்படுத்தியதில் ஜாதிவித்தியாசம் என்பது ஒன்று. கபிலர் தம அகவலில் பிராமணரைக்குறித்து சொல்லும்போது,

   " முற்படைப்பானில் வேறாகிய முறைமைபோல

நாலவகை ஜாதியை யிந்நாட்டினீர் நாட்டினீ என்றார்.

    தமிழகத்தில் ஜாதி வித்தியாசங்கள் கிடையா. ஜாதிப் பெயர்களெல்லாம தொழிலைக் காண்பித்ததே ஒழிய யா தொரு ஜாதிபையும் காண்பிக்கவில்லை. கிரிஸ்துபிறந்தபின் 800 வருஷங்களான பின்னும் ஒருவரோடொருவர் விவாகம் போசன முதலியது செய்துக்கொண்டு வந்தார்கள். கி. பி. +-வது நூற்றாண்டின் மத்தியில் " வள்ளுவபறை பதினெட் டுஜாதி" யிருந்ததாக ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆரிய ரிட நால்வகை வகுப்பாகிய பிரம க்ஷத்திரிய வைசிய சூத் திர வகுப்புகளை ஏற்படுத்த முயன்றபோது பிராமண பட் டம் தமிழ்ஜாதியா யாருக்கும் குடுக்காமல் அதை தாங்களே பற்றி கொண்டனர். மற்ற மூவகை ஜாதிகளை ஏற்படுத்தி யது 1. போசனம், 2. தொழில், 3 மதம், 4. இடம் இவைகளை யனுசரித்து ஆரியரும் திராவிடரும கி. பி. 250-வது வருஷமவரையில் மாமிச பட்ச னிகளா யிருந்தார்கள். சமனமதம வந்தபிறகு பிராமணர் அதை விட்டுவிட்டார்கள். திராவிடரில் சிலரும் அதை நீக்கினர். அதிலும் பிராமணர்களுக்கு வேண்டிய பிராணி கள் அதிக மேன்மையானவைகள். அவ்வகை பிராணிகளை கொல்லுதல் பாவம் என்றார்கள். பிராமணருக்கு வேண்டிய பஞ்சகவியத்தை தரும் பசு பரிசுத்தமானதாயிற்று. அதைக் கொல்லுதல் பெருத்தபாவமென்று பிராமணர்கள் சொன்