உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

புறத்துக்கு தான் பறவை புறம் என்று பெயர் இருந்தது. இன்னம் மைசூர் ராஜ்ஜியத்தில் கோலார் ஜில்லாவில் மாலாடு என்கிற பட்டணம் உண்டு. இவர்களில் தெலுங்கு பேசி யவர்கள் இங்கிருந்தார்கள். அவர்களுக்கு அயலாராகிய கன்னடியர் அவர்களை அவர்கள் ஊரை அனுசரித்து மாலரு என்று பெயரிட்டார்கள். 3. பறை அடிப்பதால் பறையா என்றது. திராவிடர் சரித்திரம் நன்குணாநத ஒருவர் சொல்லு கிறதாவது. திராவிடரில் ஆதியில் மூன்றுவகுப்புகள் உண்டு. அதாவது 1. குருக்கள். 2. வனிகர். 33. வேளான்கள். இவைகள் ஜாதிவகுப்பல்ல. பறையா என்போர் மூன்றாவது வகுப் பை சேர்ந்திருக்கலாம். அக்காலத்தில் அவர்களை தொடக் கூடாது என்று ஒன்றுமில்லை. அவர்களும் ஆதியில் மற்ற தமிழர்களுடன் ஒருவரோடொருவர் விவாகம போசனம முதலியது செய்துவந்தனர். பூர்காலத்தில் அரசர்களுக்குள் அடிக்கடி யுத்தங்கள் நேரிடுகிறதுண்டு. அந ககால களில் இவர்கள் பறையடிப்பது வழக்கம். அப்பொழுது பறை யடிக்கும் தொழில் வெகு சிரேஷ்டமாகவே யிருந்தது. யுத்த களத்தில் சேனைகளுக்கு முன் சென்று பறையடிப்பதை அர சர்களும் நன்கு மதித்தார்கள். அவர்கள் அரசாகளுக்கு அத் தியவசிய மானவர்களா யிருந்தார்கள். அம்மாதிரி யுத்தகா லங்கள் சென்றபிறகு மற்றவாகளுக்கு அவர்களைப்பற்றிய அக்கரை குறைந்தது. அதன்மேல புத்தமதமும் சமணமத மும் விர்த்தியாயின. அதற்குமுன் எல்லாதிராவிடரும் மாட்டு மாமிச பட்சனிகளா யிருந்தவர்கள் தான். மேற்குறித்த மதங்களால் தமிழர்கள் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்ட னர். மாடு பரிசுத்த பிராணியாய்விட்டது. பறையர் என் போர் மட்டும் விடவில்லை. பறையினால் தான் அவர்கள் சிறப்பு.