பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

சுந்தரகாண்டத்தில் இலங்கைதீவை பறையர் ஊரென்று இழிவுபடுத்தியே பாடிவைத்திருக்கின்றார். சுந்தரகாண்டம். சீதைபுலம்பல். "நிறை தவசுககுக் குறையிவளென்று நினைந்துகை விடுவாரோ பறையா ஊரிலே சிறையிருந்த வெனனை பரிந்துகை தொடுவாரோ.' "பறையர்" என்போர் மனு தர்மசாஸ்திரத்தில் குறிப் பிட்டிருக்கும் " சண்டாளருக்கு " சமப்படுத்தினார்கள். மனு தர்மசாஸ்திரம் எழுதியகாலத்தில் தமிழகத்தில் " பறையர் " என்ற பெயரே கிடையாது. ஆனபடியினால் மனுதாமசாஸ்தி ரததில் பறையர் என்கிற வார்த்தயே கிடையாது. ஆனால் அந்த சாஸ்திரத்தில் " சண்டாளன் என்கிற பத முண்டு. மனு சொல்லுகிறபடி சண்டாளன்" என்பவன் பிராமணஸ்திரிக்கும் சூத்திர தகப்பனுக்கும் பிறந்தவன். அப்படி இருந்தால் இச்சண்டாளர் என்போர் ஆரிய நாட்டில் தான இருந்திருக்கவேண்டும் ஆனால மிஸ்டா ரோமிஸ் சண்டாட்ட என்பவர் வெங்காள ராஜதானியிலிக்கும் 3 கோ டியே 60 லட்சம் ஜனங்கள் இம்மாதிரி சண்டாளர் என்பதை ஒத்துக்கொள்ளுகிறதில்லை. ஆரியா சாஸ்திரபடி மேல்ஜாதி யாா கீழ்ஜாதியாருடன் விவாகம் செய்துக்கொள்ளலாமென்று இருப்பதால் அவ்விதம் பிறந்த பிள்ளைகளை சண்டாளர் என் பது தகாது. ஆரியநாட்டில் சமண பௌத்தமதங்கனை சேர்ந்தவர்க ளுக்கு ஆரியர் நாஸ்திக பஞ்சமர் என்றார்கள். தென்னாட்டு பிராமணர்கள் அப்பேர்ப்பட்டவர்களை பறையர், சண்டாளர்