பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


5. அத்தியாயம்.
பிராமணர் தான் "பறையர்" என்போரை
தாழ்த்தியது.


முதலில் பிராமணர் கல்வியற்ற குடிகளையும் காமிய முற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து பயந்து யாசித்துவந்தார்கள். அதிகாரத்துடன் பிச்சை எடுதது உண்ண ஆரம்பித்த போது திராவிட பௌத்தர்களை ஊரைவிட்டு துறத்தியும் விட்டார்கள் அத்திராவிட பெளத்தர் பிராமணர்களின் மோச நடவடிக்கைகளை சகல குடிகளுக்கும் பறைந்துவந்தார்கள் அப்படி செய்தவாகளை பறையர் என்று வகுத்தது சகல விஷயத்கிலும் சீர்பெற விடாமல் நசித்துவிட்டார்கள். புத்த விவேக்குடிக ளிருக்கப்பட்ட யிடங்களில் பிராமணன் வந்து விட்டால் சாணத்தை கரைத்து அவர்களை துறத்தி சாணச் சட்டியை உடைப்பது வழக்கமாம். அப்படி ஓடும்காலத் தில் பிராமணர் இவர்களை தீண்டலாகாது என்று சொல்லிக் கொண்டு ஓடினார்களாம். அதை அனுசரித்து விவேகமற்ற குடிகள் இவர்களை தீண்டாதவர்களென்று கூறினார்கள். அப்படியே ஏற்படுத்தியும் விட்டுவிட்டார்கள். பிராமண பருந்து என்றும் பறப்பருந்து என்றும் பாப்பார்நாய், பறநாய் என்றும் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். வீரவாகு சக்கிரவர்ததியை பறையன் என்றார்கள். அரிச்சந்திர புராணமெழுதி, அதிலும் "பறையன் " என்ற பெயரை பரவச் செய்தார்கள். "பறையரை" பதிமூன்று வர்க்கமாய் பிரித்து "பறையன்" என்ற பெயரைப் பரவச்செய்தார்கள். மேலும் திராவிட பௌத்தர்களை சுத்த சலத்தண்டை நாடவிடாமலும், அம்பட்டாகளை சவரம் செய்யவிடாமலும், வண்-