பக்கம்:ஆத்திசூடி அமிழ்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மீது ஊண் விரும்பேல் عن سگt بعد ـسـ تتمE - “. .

அளவு மிறிய, ஊண்-சாப்பாட்டை, விரும் へ ר: ; : « 二つ பேல்-விரும்பிச் சாப்பிடா ஒரு காட்டில் ஒரு குரங்குக்குட்டி இருந்தது. அளவு மீறிச் சாப்பிட்டால் உடம்பு கெடும் என்பது அதற்குத் தெரிவதில்லை. எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே யிருக்கும். அதனுல் அதனை எல்லா மிருகங் களும் குண்டோதரன் என்று கூப்பிடுவது வழக்கம். குரங்குக் குட்டிக்குக் கலியாணம் நடந்தது. அது மனைவியோடு மாமியார் விட்டிற்கு மருவுண்ணப் போயிற்று. மாமிக்குக் குரங்குக் குட்டியின் மேல் ஆசை அதிகம். குரங்குக் குட்டிக்கு மாமி செய்யும் பலகாரத்தின் மேல் ஆசை அதிகம். ஒருநாள் காலேயில் மாமி இட்டலி பரிமாறிள்ை. வைக்க வைக்கக் குரங்குக் குட்டி பேசாமல் சாப்பிட்டுக் கொண்டே யிருந்தது. போதும் என்று சொல்லவே யில்லை. சுமார் பத்து இட்டலிக்குமேல் சாப்பிட்டது. இரண்டு செம்புக் காப்பியையும் வயிற்றில் ஊற்றிக்கட்டியது. வயிறு வெடித்து விடும்போல் ஆய்விட்டது. மூச்சுத் திணறியது. எழுந்திருக் கவே முடியவில்லே. மெதுவாகச் சென்று படுத்துக்கொண் - - أي مسة பகல் பன்னிரண்டு ம ணிக்கு மாப்பிள்ளையைச் சாப்பி டக் கூப்பிட்டார்கள். பசியே வில்லாதிருந்தும் மாப்பிள்ளை யாகிய குரங்குக்குட்டி எழுத்துபோய் இலையில் உட்கார்ந் தது. லட்டு, வடை, பாபாசம் முதலியவற்றை வாரி வாரி உள்ளே விட்ட த. வ பிற பi :ள் என்று வெடித்தது. உயி ரும் மடா ன்று போய்விட்டது. (ஆகையால்) எதையும் அளவு fறிச் சாப்பிடக்கூடாது. 30 14. முக்கரோடு இனங்கேல் மூர்க்கரோடு-அறிவில்லாத மாடர்களோடு, இதுை கேல்- சினேகம் செய்யாதே. ஒரு காட்டில் ஒரு தாய்க் குதிரை இருந்தது. அதற்கு ஒர் அழகான குட்டி உண்டு. அக்குதிரைக்குட்டி, ஒரு முரட்டுக் குனம் உடைய புலிக்குட்டியோடு சினேகம், செய்து வந்தது. தாய்க்குதிரை தடுத்துப் பார்த்தது. குட்டிக் குதிரை கேட்கவில்லை. ஒருநாள் புலிக்குட்டி கூட்டிக் கொண்டு, ஒரு யானைக்குட்டியோடு சண்டை போட்டது. யானைக்குட்டியும் எதிர்த்து அடித்தது. புலிக்குட்டி சமா ளித்துக் கொண்டது. ஆளுல் குதிரைக்குட்டியால் அடி தாங்க முடியவில்லை. அழுதுகொண்டே தாய்க்குதிரையி னிடம் ஒடி நடந்ததைச் சொல்லிற்று. தாய் குட்டியைப் பார்த்து, புலிக்குட்டியோடு சேர்ந்தால் இப்படித்தான் அடி கிடைக்கும் என்று புத்தி புகட்டியது. மற்றெருநாள் புலிக்குட்டியும் குதிரைக்குட்டியும் விளையாடிக்கொண் டிருந்தன. அப்போது அவ்வழியே ஒரு கரடிக்குட்டி வந்தது. உடனே புலிக்குட்டி குதிரைக் குட்டியைப் பார்த்து, இக்கரடிக்குட்டியோடு சண்டையோட லாம் வா என்று கூப்பிட்டது. அதற்குக் குதிரைக்குட்டி, ஐயையோ ! நான் சண்டைக்கு வரவே மாட்டேன்: ; என் அம்மா அ ப்பாள் என்று மறுத்துவிட்டது. மறுபடியும் சண்டைக்கு வரவேண்டும் என்று புலிக்குட்டி வற்புறுத் தியது. வரவே முடியாது என்று குதிரைக்குட்டி பிடி வாதம் செய்தது. உடனே முரட்டுப் புலிக்குட்டிக்குக் கோபம் வரக் குதிரைக்குட்டியை நன்ருக அடித்து விட் டது. அடி தாங்க முடியாமல் குதிரைக்குட்டி இறந்துவிட் டது. (ஆகையால்) மூர்க்கர்களோடு சினேகம் செய்யக்கூடாது. 31