உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மஜோதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 - ஆத்மஜோதி

இறைவன் வேறு என்று கருதுவது, இத்தகைய இயல்புக ளையுடையது. குறுகிய குறைபாடுகளையுடைய மனத்தின் உதவியைக் கொண்டு, அகண்டப் பேருகைாய், அண்ட பேரண்டங்களாய் விரிந்து இயங்கும் பேருணர்வாம் பரம் பொருளை உணர்வதெப்படி? உழக்கால் கடலே அளக்க முடி யுமா? கரை காணுப் பெருவெளியாய் காணுமிடமெல்லாம் பரவிக்கிடக்கும் விண்ணைக் கஜக்கோலால் அளக்க முடியுமா? மனேநிலைக்கு மேற்பட்ட ஒரு உணர்வு நிலையின் உதவியி னால்தான், வாழ்வின் கேள்விகளுக்கு விடைகாணவும் உலகப் புதிர்களின் உண்மைகளை அறியவும், சிருஷ்டிக்குப் பின்புள்ள பேருணர்வை உணரவும், யுக யுகமாக முடிவின்றி, ஒழுங்காக இயங்கி வரும் இப் பிரபஞ்சத் தோற்றத்தின் ரகசியத்தை யறியவும் முடியும். குறுகிய சிறு மனத்தின் உதவியால் இவற்றின் உண்மைகளை யறிய முயல்வது வீண்மையேயாகும். புத்துலகக் காட்சி கண்ட வேதகால ரிஷிகள், மண்ணுலகை விண்ணுலகாக மாற்ற வல்ல அதி மானச சக்தியின் இறக்கத்தை வேண்டி ஆர்வத்தீ மேனோக்கி கொழுந்து விட்டேற பிரார்த்தனை செய்திருப்பதை வேத உபநிடத மந்திரங்களில் பல இடங்களில் தெளிவாகக் . காணலாம். - அதிமானஸ் சக்தியின் ஆற்றல் அபாரமானது, அதை மனிதச் சிறு மதியால் ஊகிக்கக்கூட முடியாது; அது குறுகிய வரம்பைக்கடந்து விஸ்வ சேதனமாக விரிந்து கிடப்பது, தனியுணர் வகந்தையால் தன் இயல் நிலையை மறந்து துயர்ப்படுகுழியில் வீழ்ந்து உழலும் பாசஜீவனே அகண்டாத்மாவாக உணரச் செய்வது, பலவாகப் பிரிந்து கிடக்கும் தோற்றங்களுக் கிடையேயும், அழிந்து மறையும் பொருள்களுக்கிடையேயும், அழியாததும் பிரிவினையற்றதும் முக்காலங்களிலும் இருக்கக் கூடியதுமான நிரந்தரமான பேருணர்வை உணரச்செய்வது, ஏகத்தில் அனேகத்துவத் தையும், அனேகத்தில் ஏகத்துவத்தையும் உணர்த்துவது, நரை திரை மூப்பு சாக்காடு முதலிய துயரங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்வில் துயரக் கலப்பு சிறிது மில்லாத அம ரானந்தத்தை அனுபவிக்கச் செய்வது. - -

ஆசை, அகந்தை, அறியாமை, தனியுணர்வு முதலிய கீழியல் குணங்களை மாற்றி அவசேதனத்தில் ஒளியைப் பரப்சி .தெய்வீக ருபாந்திரம் அடையச்செய்வது; இதுகாறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/34&oldid=1544642" இலிருந்து மீள்விக்கப்பட்டது