பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஆத்மாவின் ராகங்கள்

'இதை நான் சொல்லலை. நீங்களாகவே வேணும்னு சொல்லிக்கிறீங்க...' -

- அவன் காபியை எடுத்துப் பருகினான். பருகிவிட்டு ஒன்றுமே சொல்லாமல் சில விநாடிகள் அவள் முகத்தையே உற்றுப்பார்த்தான். அவன் பார்வை பொறுக்காமல் அவள் தலைகுனிந்தாள். இதழ்களில் நாணமும், நகையும் தோன்றின. அதுவரை நிலவிய கடுமைப் பூட்டுடைந்து அவள் மெல்ல இளகினாள். கண்களிலும் மாதுளை இதழ்களிலும் சிரிப்பின் சாயல் வந்து சேர்ந்தது.

'கதர்ப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்திருக்கே போலிருக்கே...' - . . ; :

'இன்னிக்கு ரெண்டாவது தடவையாகக் கட்டிக்கிறேன். அன்னிக்கே கட்டிண்டாச்சு நீங்க பார்க்கலியா?"

'என்னிக்கு ' "சத்தியமூர்த்தி தலைமைப் பிரசங்கம் பண்றன்னிக்கி இந்தப் புடவையைக் கட்டிண்டு மகாநாட்டுப் பந்தலுக்கு நானும் வந்திருந்தேன். ' . : -

'அப்பிடியா எனக்குத் தெரியவே தெரியாதே மதுரம்?"

'உங்களுக்கு ஏன் தெரியப்போறது? சிதம்பர பாரதியோட ஏதோ பேசிக் கொண்டே நீங்ககூட அந்தப் பக்கமா வந்தீங்களே!' -

வந்திருப்பேன். ஆனா, நீ இருந்ததை நான் சத்தியமா பார்க்கலை மதுரம்' . . . . . . . . . . . . " ~

'இந்த அஞ்சாறு நாளா எப்படிப் பொழுது போச்சு?"

'நிறைய ராட்டு நூற்றேன். ராமா உன்னைப் பக்தி செய்யிற மார்க்கம் தெரியலியே ன்னு கதறிக் கதறிப்