பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 145 அவதிப்பட்டுக் கொண்டிருந்த காமராஜ் போன்ற சத்தியாக்கிரகிகளை மீண்டும் நீண்ட காலம் வெளியே வரவிட முடியாமற் செய்ய முயன்ற இந்தப் பொய் வழக்கை வக்கீல் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் உதவியால் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு முறியடித்தார்கள் ராஜாராமனும், நண்பர்களும். இந்த வழக்கின் மூலம் மதுரை ராமநாதபுரம் சீமையின் பல அருமையான தேசபக்தர்களின் வாழ்வையே ஒடுக்கிவிட முயன்ற அரசாங்கத்தின் சதி தவிடுபொடியானது. இந்த வழக்கில் வெற்றிபெற அல்லும் பகலும் அன்ன ஆகாரக் கவலையின்றி. ராஜாராமனும், முத்திருளப்பனும் நண்பர்களும் அலைந்தார்கள். -

நாளாக நாளாகத் திலகர் தேசிய வாசகசாலையின் தொண்டர்கள் எண்ணிக்கை பெருகியது. ராஜாராமன் ஓர் இளம் தேசியவாதிகளின் அணிக்கு வழி நடத்தும் பொறுப்பை ஏற்றான். இயக்கம் மெல்ல மெல்லப் பலமடைந்துகொண்டு வந்தது. அந்த வருடம் தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு காந்தி’ என்று பெயர் சூட்டினார் முத்திருளப்பன். அதே சமயம் ரத்தினவேல் பத்தருக்கு ஒரு பேரன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல பெயர் சொல்லும்படி ராஜாராமனைக் கேட்டார் பத்தர். ராஜாராமன் 'சித்தரஞ்சன் என்று பத்தரின் பேரனுக்குப் பெயர் சூட்டினான். - -

திலகர் தேசிய வாசகசாலையின் செலவுகள், துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கும் செலவு, கஷ்டப்படும் தேசத் தொண்டர் குடும்பங்களுக்கு உதவி என்று எல்லாச் செலவுகளுக்கும் பொக்கிஷதாரராக அமைந்தது போல் முகங்கோணாமல் கொடுத்தாள் மதுரம். ஜமீன்தார் இறந்த வருஷம் முழுவதும் கச்சேரிக்கோ, மேடையில் பாடவோ ஒப்புக் கொள்ளாமல் துக்கம் கொண்டாடினாள் அவள். தனபாக்கியம் வெளியே நடமாடுவதையே நிறுத்தியிருந்தாள். குடும்பத்தை விட விசுவாசமாக அவர்கள் நாகமங்கலத்தாரைப் பாவித்த அந்த

ஆ.ரா - 10