பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 147 படித்தவர்களைவிட இங்கிதம் இவை எல்லாம் ஒரு தாசியின் வீட்டில் இருப்பதைக் கண்டு அவன் சொல்லமுடியாத வியப்பில் மூழ்கினான். இது இவர்கள் குலதனம்' - என்று அவன் மனம் இடையறாது கூவியது.

'பரிசுத்தமான அன்புதான் இவளுடைய முதல் சங்கீதம். இவள் வாசிக்கும் சங்கீதமோ அதே அன்பின் இன்னொரு வெளியீடு - என்று மதுரத்தைப்பற்றி அவன் எண்ணினான். அவள் பாடும் சங்கீதத்தில் மட்டுமல்ல, பேசும் சங்கீதத்திலும் அபஸ்வரமே வராமலிருப்பதை அவன் ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனித்தான். ஜமீன்தார் காலமான பின்போ மதுரம் படிப்படியாகத் தன்னிடமிருந்து பட்டுப் புடவைகளை உடயோகிப்பதையே விட்டுவிட்டாள். அவளிடம் மிக மிக எளிமையான கதர்ப் புடவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அவன் ஒருநாள் அவளைக் கேட்டான்.

'என்ன மதுரம், பட்டுப்புடவை ஆசையை அறவே விட்டாச்சுப் போலிருக்கே!' - - . -

'எப்பவும் எனக்கு அந்த ஆசையே இல்லை? அப்பா பட்டுப் புடவையா வாங்கிக் குமிச்சார். அரண்மனைக்குப் பட்டுப்புடவை வாங்கினா ஞாபகமா இங்கேயும் சேர்த்து. வாங்குவார். கட்டிக்காவிட்டால் அவர் மனசு புண் படுமேன்னு கட்டிண்டிருந்தேன். இனிமே அதுகூட அவசியமில்லே...", - - w

'ஏன்? இனிமே பட்டுப்புடவை கிடைக்காதோ' 'சந்தேகமென்ன? உங்ககிட்டச் சொன்னா, நீங்க கதர்ப் புடவைதானே வாங்கிக் குடுப்பீங்க? நானும் நிறைய நூல் சிட்டம் போடுகிறேன். கதர்தானே சிட்டத்துக்குக் கிடைக்கும்?' * . . . . . . . . .

'உனக்கு வேணும்னாப் பட்டுப்புடவையே வாங்கிக்கலாமே? . . - ... -- -