உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 203 இருந்திடிச்சு. நாகமங்கலத்துக்குப் போனா உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னுதான் அது பயப்பட்டுதுன்னு பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா எங்கிட்ட இதைப் பத்திப் பின்னாடி சொன்னாங்க. நாலஞ்சு மாசம் மதுரத்துக்குத் தெரியாமே ஜமீன்தாரிணியே வீட்டு வாடகை, வைத்தியச் செலவு, எல்லாத்துக்கும் பணம் கொடுத்தாங்க. பஞ்சவர்ணக் கிளியா இருந்த மதுரம் இந்த நாலஞ்சு மாசத்திலே எலும்பும் தோலுமா ஆயிடிச்சு. கபம் கட்டி ஒரே கோழையாத் துப்பித் துப்பிக் கண்ணுங்க குழிவிழுந்து பார்க்கறதுக்கு சகிக்காம ஆயிடுச்சு. பிருகதீஸ்வரன் சார் புதுக் கோட்டைக்குப் போயி யாரோ தெரிஞ்ச டாக்டரை இதுக்காகவே கூட்டியாந்தாரு. அவரு வந்து பார்த்திட்டு, 'rயரோகம் ரொம்பக் கடுமையாப் பிடிச்சிருக்கு ரொம்ப ஜாக்கிரதையா கவனிக்கணும். மனசு உற்சாகமா இருக்கும்படி செய்யனும், பால், தக்காளி, முட்டை, எல்லாம் நெறையக் கொடுக்கணும். மனசு ரொம்பக் கெட்டிருக்கு, ஆதரவான சூழ்நிலையும் நல்ல காற்றும் வேணும்'னு ஏதோ மருந்தும் எழுதிக் கொடுத்திட்டுப் போனாரு அதைப் பத்தி உங்களுக்கூட அமராவதிஜெயிலுக்கு ரெண்டு மூணு கடிதாசி எழுதினாங்க. பதில் இல்லே. அந்தக் கடிதாசி உங்களுக்குக் கிடைச்சிதா இல்லியான்னும் தெரியலே. இவ்வளவும் ஆணப்புறம் ஜமீன்தாரிணி. அம்மா ரொம்ப வேதனைப்பட்டு, இந்தா மதுரம் ஆயிரமிருந்தாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு உன்னை நான் சாகவிடமாட்டேன், நீ சம்மதிச்சாலும், சம்மதிக்காவிட்டாலும் நாகமங்கலத்துக்கு வந்தாகணும். உன் உடம்பு தேற வேறே வழியே இல்லே...' என்று வற்புறுத்தி நாகமங்கலத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்படி அவங்க கூப்பிட்டுக்கிட்டுப் போனப் பறம் தான் பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா புதுக் கோட்டைக்குக் திரும்பிப் போனாங்க, அதுவரை அந்தம்மாதான் கூட இருந்து மதுரத்தை ராப்பகலாகக் கவனிச்சிக்கிட்டாங்க. நாகமங்கலத்துக்குப் போனப்பறம் மதுரத்துக்கு உடம்பு தேறியிருக்குன்னு போன வாரம் பிரகதீஸ்வரன் சார் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொன்னாரு!