மயிலின் வேகம் அத்தூளின் வாரி திடர்பட்டதே. 89 தூள் நிரம்பவே கடல்கள் மேடிட்டுப் போய்விட்டன வாம். "மயிற் பீலியின் காற்றுப் படவாவது! மேரு கிரி அசையவாவது! கால் கால் எடுத்து வைக்க மலைகள்தூள் தூளாகப் போகவாவது!' என்றால் இப்படி எல்லாம் சொல்வது கவிஞர்களுடைய மரபு. ஆறு, ஆறரை அடி உயரமுள்ள மனிதனை நாம் என்ன சொல்கிறோம்? பனைமரம் மாதிரி இருக்கிறான் என்று சொல்கிறோம். என்ன பொருள்? உயரமாக இருக்கிறான் என்று பொருளே தவி ரப் பனை மரம் மாதிரியே இருபதடி உயரம் உள்ளவன் என்று ஆகாது. முருகப் பெருமானது வேகத்தை, அவனுடைய வாக னத்தின் வேகத்தைச் சொல்வது போலச் சொல்கிறார். வாக னத்தின் முழு வேகத்தைக் கூடச் சொல்லவில்லை. அது போகிற வேகத்தில் பீலியின் கொத்துப்பட்டு அடிக்கின்ற காற்றைக் கொண்டே சொல்கிறார். 'அது கால் எடுத்து வைக்கையில் மலைகள் பொடிப் பொடியாகி விட்டன; மேடு பள்ளம் ஆகி விட்டது; பள்ளமான கடல்களில் இந்தத் தூள் விழுந்து அவை மேடாகி விட்டன' என்கிறார். தன் உள்ளுறை பொருளைக் காண வேண்டும். மேடும் பள்ளமும் சூரபன்மன், தவத்தாலும் குணத்தாலும் உயர்ந்த பெரியவர்களைச் சிறியவர்களாக்கினான். மிகச் சிறியவர் களாக இருந்தவர்களைப் பெரியவர்களாக்கினான். அவக் குணம் நிரம்பிய அசுரர்கள் பெரியவர்களாகப் போய்விட் டார்கள். தவக்குணம் மிக்க தேவர்கள் சிறியவர்களாகப் போய்விட்டார்கள். இந்திர குமாரனைச் சிம்மாசனத்தி லிருந்து இறக்கிச் சிறையில் தள்ளினான். சூரனுடைய பிள்ளை இந்திரன் உட்கார்ந்திருந்த இடத்திலே அமர்ந்து விட்டான். மேடு பள்ளமாகப் போயிற்று. பள்ளம்
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/103
Appearance