சேவற் பதாகை .101 'வீணையே வராது எனச் சொல்லிக் கழித்துவிடப் பட்ட இவனே இவ்வளவு நன்றாக வாசிப்பான் என்றால், இவன் குருநாதர் எப்படி வாசிப்பாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?' என்றான். எனச் "அவரை உமக்குத் தெரியாதா? அவர்தாம் பாண் பத்திரர்; பாண்டியன் அவைக்களத்துப் பாணர்' சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான். அன் றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஓடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறை வன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ் வளவு நன்றாக வாசிக்கிறேன் என்று நீர் சொன்னீரானால், என் குருநாதர் எப்படி வாசிப்பார் என்பதை நீரே ஊகித் துக் கொள்ளலாம்' எனச் சொல்வது போலச் சொன்னார். 2 சேவலின் பெருமை இதைப் போலவே இந்தப் பாட்டில் தன் தந்தையின் பெருமையை அருணகிரிநாதக் குழந்தை நேரே சொல்ல வில்லை. அவனுடைய கொடியின் பெருமையைச் சொல்வ தன் வாயிலாக அவன் பெருமையைப் புலப்படுத்துகிறது. பெரிய வெற்றியை உடைய மன்னர்களின் அரண்மனை யிலும், கோட்டைகளிலும் கொடி பறக்கும். நெடுந்தூரத் தில் வருகிறபோதே காற்றில் ஆடுகிற அந்த வெற்றிக் கொடியைப் பார்த்துவிட்டு எத்தனையோ பேர்கள் அஞ் ஓடுவார்கள். கடவுளரின் திருக்கோயிலின் வாசலிலும் கொடி பறக்கிறது. ஆடுகின்ற அக்கொடி அத் திருமாளிகையின் பெருமையையும், அதில் இருக்கிற தெய்வத்தின் வெற் றிச் சிறப்பையும் விளக்குகிறது. முருகனுடைய திருக்கோயி லில் பறப்பது சேவற்கொடி; அவன் திருக்கரத்தில் இருப்
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/115
Appearance