கிங்கிணி ஓசை "சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு" 121 என்று திருவள்ளுவர் நைமித்திகமாகிய விழாவைச் சிறப் பென்று குறிக்கிறார். விழாக்களுக்குள் சிறந்தது திருத்தேர் விழா; அதைப் பிரம்மோற்சவம் என்பர். அதைப் பாராட்டி உலா என்ற பிரபந்தத்தைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இவ்வளவு சிறப்புடைய பிரம்மோற்சவத்தில் திருத் தேரில் எழுந்தருளும் மூர்த்தி யார் தெரியுமா? சோமாஸ் கந்த மூர்த்திதான். உலகத்தாருடைய பாவத்தைப் போக்கி அருளை வழங்க இறைவன் குடும்பத்தோடே எழுந் தருளி வருகிறான். அப்பர் சுவாமிகள் இந்தக் குடும்பத்தைப் பாராட்டு கிறார். அம்மையும் அப்பனும் பிள்ளையுமாக இருக்கும் தெய்வக் குடும்பத்தை அவர் பாராட்டும் முறை அவர் சிவ பக்தர் என்பதைக் காட்டுகிறது. "நன்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்" என்று சொல்கிறார். நன்கடம்பனாகிய முருகன் குழந்தை; அவனைப் பெற்றவள் உமாதேவி; அவளைப் பங்கில் உடை யவன் சிவபெருமான். குழந்தை, மனைவி இருவரையும் சொல்லிக் குடும்பத் தலைவனையும் சொல்கிறார். மற்ற இரு வர்களையும் குடும்பத் தலைவனோடு சார்த்திச் சொல்கிறார். குடும்பத் தலைவனைப் பாடும் பணியை உடையவர் அவர். அருணகிரிநாதர் முருகனைப் புகழ்கிறவர். அவனையே முக்கியமாக வைத்துப் பேசுகிறார். முருகன், அவன் தாய், அவள் கணவர் என்ற வரிசையில் கடைசியில் சிவபெருமா னிடம் வந்து முடிக்கிறவர் அப்பர். அருணகிரிநாதரோ சிவன், அவன் தலைவி, அவள் குமாரன் என்ற வரிசையில்
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/135
Appearance