கிங்கிணி ஓசை 129 ளிடம் உள்ள இந்த நிலையற்ற தெளிவு மனிதனிடம் இருக் கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனிடமும் அசுர இயல்பும் தேவ இயல்பும் கலந்தே இருக்கின்றன. அசுர இயல்புகளைக் கொஞ்சங் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டு வந்தால் நன்மை உண்டாகும். முருகன் அழுகையொலி கேட்டுப் புலம்பிய அசுரர்கள் அன்றோடு அந்த அச்சத்தை மறந்து போனார்கள். மறுபடி யும் எச்சரிக்கை செய்வதுபோல முருகன் கிங்கிணி யொவியை எழுப்பினான். அப்போதைக்கு அஞ்சினார்கள். அல்வளவுதான். தேவர் மகிழ்ச்சி அவர்கள் றைவனுடைய கிங்கிணி ஓசையைக் கேட்டு அஞ்சி னவர்களும் நடுங்கினவர்களும் இருக்கட்டும். யாரேனும் அதைக் கேட்டு மகிழ்ந்தார்களா? அசுரர்களுடைய அச்சத் தில் மகிழ்ச்சியும் முருகனுடைய அவதாரத்தில் தைரியமும் அடைபவர்கள் தேவர்கள். அவர்கள், 'நம்மைக் காப் பாற்ற வந்த பெருமான் குழந்தைத் திருவிளையாடல்களைச் செய்துகொண்டு வளர்கிறாள்" என்று எண்ணி மகிழும்படி அந்தக் கிங்கிணியோசை செய்தது. 'இந்தச் சூரபன்ம னுடைய கொடிய ஆட்சியைப் போக்க இயலாமல், நாம் நம் இன்ப வாழ்வை இழந்து திண்டாடுகிறோமே! இனியும் நமக்கு எந்த நிலை வருமோ!' என்று அஞ்சிக் குலைந்து கொண்டிருந்த தேவர்களுக்கு இப்போது அந்த அச்சம் போய்விட்டது; நம்பிக்கை உதயமாயிற்று. தேவர் பயம் கெட்டதே. சூரியன் வானத்தில் தோன்றும்போது மக்கள் துயி அணர்ந்து எழுந்து சுறுசுறுப்போடு வேலை செய்யப் புகு கிறார்கள்.பறவைகள் சிறகை யடித்துக்கொண்டு பறக் தாமரை மலர்கள் மலர்கின்றன. ஆனால் எலும் கின்றன. .
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/143
Appearance