இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிங்கிணி ஓசை 131 [ஒப்பற்றவராகிய சிவபெருமானைத் தன்னுடைய வலப் பாகத்தில் உடைய உமாதேவியின் குமாரனாகிய முருகனது உடை மணி யென்னும் அணி அணிந்த அழகிய இடையில் கட்டிய கிங்கிணியின் ஓசை காதிலே பட, அசுரர் திடுக்கிட்டு அஞ்ச, திசை கள் செவிடுபட்டு எட்டு மலைகளும் பொன்னாலான பெரிய சாரலை யுடைய மேருமலையும் அதிர்ந்தன; தேவர்களின் பயம் அழிந்தது. ஒருவர் - ஒப்பற்றவர். உடையாள் - உமாதேவி. 2600 மணி - இடையில் அணியும் ஒருவகை ஆபரணம். அரை - இடை. அரக்கர் - ராட்சதர்; இங்கே அசுரரைக் குறித்தது.வெருவர- அஞ்ச, கனகம் - பொன்.வரை - மலைப்பக்கம்.)