ஆனந்தத் தேன் அநுபவமும் வியப்பும் முருகவேளின் வெற்றிப் பிரதாபத்தைப் பேய்களின் விளையாட்டு மூலமாக உணர்த்தினார் அருணகிரிநாதர். பழைய மரபைப் பின்பற்றி முருகன் போர்க்களத்திலே வென்று களவேள்வி செய்த செய்தியைச் சொன்னார். பிறகு, என்னுடைய மனமயக்கத்தைத் தீர்த்தருள வேண்டு மென்று வேண்டிக்கொண்டார். நம்முடைய பிரதிநிதியாக இருந்து நாம் செய்ய வேண்டிய விண்ணப்பத்தை அவர் செய்தார். ஆண்டவனுடைய திருவருளால் இன்ப அநு பவத்தைத் பெற்றவர் அவர். கந்தர் அலங்காரத்தில் முதல் பாட்டிலேயே, "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா" என்று அந்த அநுபவத்தை எடுத்துச் சொன்னார். மேலும் பல பல பாட்டுக்களில் தம் அநுபவத் தைப் பேசுகின்றார்.அப்படிச் சொல்கிற பாட்டு ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒளியில் விளைந்த உயர்ஞான பூதாத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை 'அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே] "முருகன் ஆறுமுக நாதனாகிய பரம குரு. அவன் எனக்குச் செய்த உபதேசத்தின் பெருமையை என்ன
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/15
Appearance