ஆனந்தத் தேன் இவை யாவும் நம் கண்ணில் படாதவாறு இருந்தது என்னே!' என்று வியப்பு எய்துகிறான். . CK மேல் நாட்டில் ஆர்க்கிமிடீஸ் என்ற விஞ்ஞானி ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தபோது, கத்திக்கொண்டு குதித்தானாம். ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தால் வியப்பு உண்டாகும். இந்த மனிதனும் வியப்பில் மூழ்கி னான். அவன் கண்டுபிடித்தது சாமானியமான பொருளா? மிக உயர்ந்து நிற்கும் மலை. அந்த இடத்தில் திடீரென்று மலை முளைத்ததா? இல்லை. முன்பே இருந்த அந்தப் பெரிய மலையை, இருட்டுச் சூழ்ந்துகொண்டிருந்ததால், அவன் பார்க்கவில்லை. ஒளி தோன்றியவுடனேயே அந்த மலை அவன் அதிசயிக்கும்படியாக அவன் கண்ணில் தோன்றி யது. புதியதாக அங்கே வந்து நின்றது போல இருந்தது அவனுக்கு. உடனே அதன் மேலே ஏறவேண்டுமென்று விரும்பினான். இருட்டிலே நேராக இருக்கின்ற பா ை கூடத் தெரியாது; சிறிய ஒளியின் துணை இருந்தால் நேரான பாதை தெரியும். ஆனால் கரடு முரடாக இருக்கிற ஒற்றை அடிப்பாதை தெரியாது. நல்ல ஒளி இருந்தால் என்ன கவ?ை நேராக இல்லாத பாதையாக இருந்தாலும், காலைத் தூக்கித் தூக்கி வைத்து ஏறுகின்ற செங்குத்துப் யாதையாக இருந்தாலும் நன்றாகத் தெரியும். ஆகவே, அவன் நல்ல ஒளியின் உதவியைக் கொண்டு மலை மேலே மெல்ல மெல்ல ஏறிப் போனான். மலை ஏற ஏற அவன் இருக்குமிடம் பூமி மட்டத்திலிருந்து உயர்ந்துகொண்டே போயிற்று. பார்வை விரிதல் தை நிலத்தில் இருக்கும்பொழுது குறுகிய இடமே அவன் கண்ணில் பட்டது. வீட்டுக்குள் இருந்தால் அந்த வீட்டுக் குள் இருக்கும் பொருள்கள் மட்டுமே தோன்றும்; வீதி
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/19
Appearance