உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தத் தேன் 31 தேசிகன் என்றால் குரு. குருநாதன் ஆகிய அவனுக்கு அடையாளம் என்ன? யாருக்கும் இல்லாத அடையாளம் உண்டு அவனுக்கு. அவன் முகம் ஆறு உடையவன். தேசிகன் என்று பொதுவாகச் சொன்னால் அது யாரையும் குறிக்கும். முருகப் பெருமானையே ஆறுடைத் தேசிகன்" என்றார். குறிக்க, "முகம் சிவபிரான் ஐந்து முகம் உடைய தேசிகன். ஐந்து முகங்களினால் அவர் இருபத் தெட்டு ஆகமங்களைச் சொன்னார். குமரக் கடவுள் ஆறு முகம் உடையவன். இந்த ஆறு முகக் கடவுள் ஐந்து முகக் கடவுளுக்கே பிரணவ மந்திரோபதேசம் செய்தவன். 'அத் தகைய ஆறுமுகம் உடைய குருநாதன் எனக்கு உபதேசம் செய்தான்' என்கிறார் அருணகிரியார். எதற்கு உபதேசம் செய்தான்? பொருளைத் தெரிந்துகொள்ள அல்ல; தெளிந்து கொள்ள என்கிறார். அறிவு என்பது நூல்களினாலே அறி வது.காலம், இடம், பூதம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற ஒரு பொருளை அறிவினாலே தெரிந்துகொள்வது இயலாத காரியம். அநுபவத்தினாலேதான் அது முடியும். அறிவுடையவர்கள் எல்லாம் அந்த ஆனந்தத்தை அடை வார்கள் என்று சொல்ல முடியாது. அறிவினாலே பல பல தத்துவங்களையும் அறிந்து, உணர்ந்து, கடந்து செல்லலாம். ஆனால் அந்த அறிவு நழுவிய நிலையில், அன்பு கனியும்போது தான் அந்த ஆனந்தத்தைப் பெற முடியும். சர்க்கரை இனிக்கும் என்பதை அறிவினாலே தெரிந்து கொள்ளலாம். அல்லது அதைப்போன்ற பல பொருள் களை உபமானமாக வைத்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எப்படி இனிக்கும் என்பதை அநுபவத்தினாலே தான் அறியலாம். அநுபவத்தினால் அறிந்துகொள்வது தெளிந்துகொள்வது ஆகும். அறிவினாலே அறியப்படு வனவற்றைப் பிறருக்குச் சொல்ல முடியும். அது பவத்தினாலே உணர்கின்றவற்றை யாருக்கும் சொல்ல முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/45&oldid=1725250" இலிருந்து மீள்விக்கப்பட்டது