என்கிறார். சும்மா இருக்கும் எல்லை 57 "அதைப்பற்றி எதுவும் சொல்லுகைக்கு இல்லை என்கிறார். சொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம் இழந்து சும் மாஇருக்கும் எல்லையுட் செல்ல, எனைவிட்டவா? . இழப்பது என்பது நஷ்டம் அல்லவா? என்னிடம் இருந்த ஒன்றை இழந்துவிட்டேன் என்று சொன்னால் அது துக்கப்பட வேண்டிய நிலை. ஆனால், இங்கே இழந்ததைச் சிறப்பித்துப் பேசுகிறார். இழப்பது லாபம் என்று சொல் கிறவர் அருணகிரியார். "உல்லாச நிராகுல, யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற, என்னை இழந்தநலம் சொல்லாய் முரு கா!சுர பூபதியே!" என்று அவர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார். "எல்லாம் அற என்னையும் இழந்த நலம் எப்படி எனச் சொல்லாய், முருகா" என்று கேட்கிறார். எல்லாம் இழந்ததை நலம் என்கிறார். பாயசம் சாப்பிட்ட குழந்தை, "அம்மா பாயசம் சாப்பிட்டேனே ; அது எப்படி இருந்தது சொல்லம்மா" என்று தாயைக் கேட்பது போல இருக்கிறது இது. அதைச் சுவைத்ததிலே தான் அடைந்த இன்பத்தைக் குழந்தையால் சொல்ல முடியவில்லை. "உலக இன்பத்தை நுகர்வதற்குக் கருவியாக இருக்கும் கருவி கரணங்களை எல்லாம் இழக் தேன். இவற்றை இன்னவாறு இழந்தேன் என்று சொல் லக்கூட முடியாத வகையில் என்னையும் இழந்துவிட்டேன். என்னையே இழந்த பிறகு நுகர்ந்ததை உணரவும், சொல்வ வும் நான் இல்லையே! நீ இருக்கிறாய். ஆகையால் நீதான் சொல்ல வேண்டும், முருகா!" என்று கேட்கிறார். எல்லாம் இழப்பதில் தன்னை இழந்ததும் அடங்கும்.
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/71
Appearance