உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆனந்தத் தேன் மலையில் பிறந்தவளுமான வள்ளியை, தன் புயங்களாகிய மலையில் முருகன் அணைந்தான். அவன் அருள் வல்லமை இருக்கிறதே, அது என்னைப் பேச்சு அற்ற மோன நிலை யான சும்மா இருக்கிற எல்லைக்குள் செல்ல விட்டது; எல்லாம் இழந்த இன்ப நலத்தை அளித்தது" என்கிறார் அருணகிரியார். சொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம் இழந்துசும் மா இருக்கும் எல்லையுள் செல்ல எனைவிட்ட வா! இகல் வேலன் நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே! [பகைவரோடு போராடுகின்ற வேலையுடைய முருகன், கேட் பதற்கு இனிய கொல்லிப் பண்ணின் தன்மையைச் சேர்க்கின்ற சொல்லையுடையவளும், கற்களையுடைய மலையில் இருந்தவளும், கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயையுடையவளுமாகிய வள்ளி நாயகியைத் தழுவுகின்ற பெரிய மலைபோன்ற தோள்களை யுடைய பெருமைபெற்ற முருகனுடைய அருள் வல்லமை, சொல் வதற்கு இல்லை என்று கருவி கரணங்களெல்லாம் நழுவ அவற்றை இழந்து சும்மா இருக்கும் எல்லைக்குள்ளே செல்லும்படி என்னை விட்டவாறு என்ன ஆச்சரியம் ! 2 விட்டவா விட்டவாறு என்னே! இகல் இகலுகின்ற; பகைவரோடு மாறுபடுகின்ற. கொல்லி - ஒரு பண். வரை-மலை. வல்லி - வள்ளிநாயகி, புல்கின்ற - அணைகின்ற; புல்குகின்ற என் பது செய்யுளை நோக்கி விகாரமாயிற்று. மால் - பெருமை,வல் லபம் - ஆற்றல். வல்லபம் விட்டவா!?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/86&oldid=1725292" இலிருந்து மீள்விக்கப்பட்டது