உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் வேகம் 83 விலக்குவதற்குக் காரணத்தைக் கூறினார்; 'அவை தோகை யுடையவாகிப் பெண்பால் போலும் சாயலவாகலான் ஆண் பால் தன்மை இல என்பது கொள்க' என்றார். முருகப் பெருமான் ஏறுகின்ற மயில் அழகானது; மென்மையானது. ஆனாலும் அதற்கு ஆண்மையும், வீரமும் இல்லை எனச் சொல்லக் கூடாது. பக்தர்களுக்கு மென்மையாக இருக் கும் அம்மயில் பகைவர்களுக்குப் பயத்தை அளிக்கும் வீரம் உடையது. ஆகவே அந்த மயிலைச் சேவல் என்று அழைக் கலாம் என்று அவ்வுரைகாரர் எழுதுகிறார். செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும்' என்பது அவர் உரை. "எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவல்மேல் ஏறி என்று கந்தபுராணத்தில் முருகன் ஏறும் மயிலுக்குச் சேவல் என்ற பெயரையிட்டு வழங்குகிறார் கச்சியப்ப சிவா சாரியார்.

மயில் வாகனம், போர் புரியும்போது முருகப்பெருமா னுக்குப் பயன்பட்டது. அடியார்களுக்கு அருள் செய்யப் போகும்போதும் பயன்படுகிறது. எந்த இடத்தில் எந்தச் சமயத்தில் நினைத்தாலும் மயிலின்மீது ஏறி வருகின்றான் அருள்புரிய. அத்தகைய வீரமுடைய மயிலைப் பற்றி இந் தப் பாட்டில் அருணகிரியார் பாடுகிறார். 3 வெற்றி வேலோன் வாகனம் குசைநெகி ழாவெற்றி வேலோன், அவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/97&oldid=1725303" இலிருந்து மீள்விக்கப்பட்டது