உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயச் சிறப்பு! 11 நடந்துகொண் டிருக்கையில், விவசாயத்தைப்பற்றி யார் படிக்கப்போகிறார்கள் என்றல்லவா கேட்டீர்கள். அதே தைரியத்தினால்தான் நான் இதை எழுதத் தொடங்கு கிறேன். ஊரெல்லாம் தீப்பற்றி எரிகையில், நமது பிடில் வாத்திய சப்தத்தை யாரும் கேட்க மாட்டார்களென்று நீரோ தைரியமாய்த் தொடங்கியதுபோல, ஒருவரும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியம் இருக்குபோது நான் என்ன 'கதை' விட்டால்தான் யார் கேட்கப் போகிறார்கள்?

கல்லூரியைப் பார்க்கப் தயை முக்கியமாகக் ஆனால் இந்தக் கட்டுரை நான் எழுதத் தொடங்கிய தற்கு உண்மைக் காரணம் என்ன வென்பதையும் உங் களுக்குச் சொல்லிவிடவேண்டும். கொஞ்ச நாளைக்குமுன் நான் கோயமுத்தூர் விவசாயக் போயிருந்தேன் அங்கே எ கவர்ந்தது என்னவென்றால் கல்லூரி ஆசிரியர்களின் வாச ஸ்தலமே யாகும். நாற்சதுரமாயமைந்த பசும்புற் கம்பளம் விரித்த விசாலமான மைதானம். அதன் நான்கு புறங் களிலும் சிறிதும் கோணலின்றி நேராக அமைத்த அழகிய சாலைகள். அச்சாலைகளின் இரு புறங்களிலும் தழைத்துப் படர்ந்திருந்த இனிய பசுமரங்கள். அச்சாலைகளுக்கப்பால் இருந்த அழகிய சிறு வீடுகள்; அவ் வீடுகளின் முன்னால் வைத்துப் பயிராக்கிய இனிய பூஞ் செடிகள்; விதவிதமான வர்ண இலைகள் உள்ள செடிப் புதர்கள்; தேவ மகளிர் போல் அச்செடிகளினிடையே உலாவிக்கொண்டிருந்த கற்பரசிகள்; 'குழலும் வீணையும் யாழு மென்றினைய குழைய அவ்வீடுகளினின்று எழுந்த இன்ப கீதங்கள். அந்தக் கீதங்களைச் சுமந்து பூஞ்செடிகளில் தவழ்ந்து வந்த குளிர் பூந் தென்றல் ஆகிய இவைகளினாலெல்லாம் என் பரவசமடைந்துவிடவே, 'ஆகா! விவசாயத்தின் பெருமையே பெருமை!" என்று வியந்துரைத்து நின்றேன். ஒளவை. வள்ளுவர். கம்பர் முதலாயினோர் உழவின் சிறப் பைக் குறித்துப் பாடியனவெல்லாம் நினைவிற்கு வந்தன. மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/16&oldid=1721400" இலிருந்து மீள்விக்கப்பட்டது