விவசாயச் சிறப்பு! 15. றிருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தாழ்மையுடன் தெரி வித்துக் கொள்கிறேன். நெற்பயிர்' என்பதைப்பற்றிய அக் கட்டுரையில் எனது விவசாயக் கல்வியின் முழுச் சாரம் சம் அடங்கியிருந்தது என்று சொல்லலாம். ஆகவே, அக் கட்டுரையின் சுருக்கத்தை முதலில் இங்கே தந்துவிட்டு, அப்புறம் என் என் விவசாய அநுபவங்களைப்பற்றிக் கூறப் புகுதல் நல்லதல்லவா? நெல் நெல் என்பது ஒரு வகைச் செடியில் காய்க்கும் தானிய மாகும். அது மரத்தில் காய்க்கும் ஒரு வகைப் பழம் என்பதாகச் சில விவசாய நிபுணர்கள் சொல்லுகிறார்கள். இது முற்றும் தவறான கொள்கை என்பது இந்தியாவில் பிறந்த குஞ்சு குழந்தை எல்லோருக்கும் தெரியும். நெல் உண்டாவது செடியிலேயேயன்றி மரத்தில் அல்லவே அல்ல. . நெல் செடிக்குக் கிளைகள் இல்லை. ஆனால் இலைகள் ண்டு. பூ கிடையாது. அமெரிக்கா தேசத்தில் ஓர் அதிசயமான நெல் செடி இருப்பதாகவும். அது பூ பூப்ப தாகவும் சொல்கிறார்கள்; ஆனால் இதைச் சொல்லக் கேட் டவர்களேயன்றிப் பார்த்தவர்கள் யாருமில்லை. றது. நெல்லானது செடியில் எந்தப் பகுதியில் காய்க்கின் என்பது அடுத்த கேள்வி; பல தேசங்களிலுமுள்ள பல விவசாய நிபுணர்கள் நீண்ட கால ஆராய்ச்சியின் பேரில், நெல்லானது செடியின் வேரில் காய்ப்பதில்லை என்ற ஒரு முகமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள், ஆகவே நாமும், இம் முடிவை ஏற்றுக்கொள்கின்றோம். மாக ஆனால் நெல்லுக்கு வேண்டிய ஆகாரம் என்னவென் பதைப்பற்றி இதுவரையில் ஒரு முகமான முடிவு ஏற்படா தது மிகவும் வருந்தத்தக்கதே யாகும். நெல்லுக்கு முக்கிய வேண்டியது உரம் என்பர் சிலர். நெல்லின் பிரதான உணவு தண்ணீர்தான் என்பர் வேறு சிலர். உரமும் நீரும் அநாவசியம், வேண்டுவது சூரிய வெப்பமே என்று வற்புறுத்துவர் பின்னும் சிலர். ஆராய்ச்சியின்றி வெறும் அநுபவம்மட்டும் உள்ளவர்களோ இவை மூன்றும்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/18
Appearance