22 22 ஆனந்த ஓவியம் வருஷமும் விளைந்தது கிடையாது. ஆனால், பொங்கல் பண்டிகை ஆகி, அறுவடை தொடங்கும் சமயத்தில் ஒரு கடு மழை பெய்தது. நெல் வயலில் பாதி, களத்தில் பாதி, வழி யில் பாதியாகச் சிதறி நாசமடைந்து போயிற்று. 1927ஆம் வருஷம்: ஆற்றில் தண்ணீர் வருவதற்குக் கால தாமதம் ஆகிவிட்டது. ஆகவே எல்லா வேலையும் தாமதம். விளைவும் அதற்குத் தகுந்தாற்போலத்தான். 1928ஆம் வருஷம்: இந்த வருஷத்தைப்போல் தண்ணீர்த் தட்டு வேறு எந்த வருஷத்திலும் இல்லை. வயல்கள் அடுத் தடுத்து நனைவதும் காய்வதுமாயிருந்தன. மூன்றில் ஒரு பங்கு தான் விளைச்சல். 1929ஆம் வருஷம் : எல்லாம் ஒற்றுமையாயிருந்தன. நல்ல உழவு, நல்ல நடவு, நல்ல விளைச்சல். சராசரி மாவுக்குப் பதினைந்துக்குக் குறையாமல் கண்டது. ஆனால், என்ன பயன்? நெல் வாங்குவாரில்லை. 1921ஆம் வருஷத்தில் கலம் ரூபா 4 விற்றது. இப்போது ரூபா 2க்கு யாரும் கேட்கவில்லை. சர்க்கார் வரி கடன் வாங்கிச் செலுத்த வேண்டியதாயிற்று. 4. நவிற்றது. 1930ஆம் வருஷம்: ஐப்பசி மாதம் பெய்த பெரு மழையினால் இந்தப் பக்கத்தில் பத்துப் பதினைந்து கிராமங்கள் அடியோடு வெள்ளப் பாழ் ஆயின. நமக்கு. அவ்வளவு மோசமில்லை. ஆறு மாநிலம் சாகுபடி பாழ்; பாக்கி யெல்லாம் பாதகம் இல்லை.' ஆகவே, மற்றவர்களைப்போல் அடியோடு முழுகிப் போகவில்லை யென்பதைக் கொண்டு தான் இவ் வருஷம் திருப்தியடைய வேண்டும்.
இந்தக் கட்டுரைக்கு நான் கொடுத்த தலைப்பு அவ்வளவு பொருத்தமில்லை யென்று இப்போது தோன்று றது. 'நிஷ்காம கர்மம்' என்று கொடுத்திருந்தால் மிக்க பொருத்தமாயிருக்கும்! இந்தப் பூவுலகில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த 'நிஷ்காம கர்ம யோகத்தை' யாரா வது அநுஷ்டிக்கிறார்களென்றால் அவர்கள் இந்தியாவின் விவசாயிகள் தாம். உழைத்துப் பாடுபட வேண்டியது அவர் களுடைய பொறுப்பு. அதனுடைய பலாபலன்கள் ஆண்டவ னுடைய பொறுப்பு. வரி வசூல் செய்தல் சர்க்காரின் பொறுப்பு.