எந்த ஊர், ஸார்? 29 சமயம்' என்று தீர்மானித்து, நண்பர் தண்டனையாகி வெளியே வந்ததும் "ஏனப்பா, பௌண்டன் பென்னையும் ரிஸ்ட் வாச்சையும் என்ன செய்யப் போகிறாய்? என்னிடத் தில் கொடுத்து வையேன்; பத்திரமாய் வைத்து வைக் கிறேன் என்றேன். "அட பாவி! முன்னாலேயே கேட்டிருக் கக்கூடாதா? ஸம்மன் வந்தவுடனேயே தாண்டவராயன் வாங்கிக்கொண்டு விட்டானே?" என்று பதில் வந்ததும். எனக்கு எப்படியிருந்திருக்குமென்று நீங்களே சொல்லுங்கள். 'தரித்திரப் பயல்! பிறர் சொத்துக்கு இவ்வளவு ஆசையா? தண்டனையாவதற்குள் அவசரமா?' என்று தாண்டவராயனை மனத்திற்குள் திட்டினேன். என்னுடைய முகங்களைப் பார்த்துத்தானா என்னவோ நண்பர் என் முதுகில் தட்டிக் கொடுத்து, கவலைப்படாதே! அவற்றிற்குப் பதில் வேறு இரண்டு சாமான் உனக்குத் தருகிறேன் என்று கூறி, தாம் அணிந்திருந்த காந்தி குல்லா யையும், 'ஹாவர்ஸாக்' என்னும் (தோளில் மாட்டிக் கொள்ளும்) கதர்ப் பையையும் கொடுத்தார். அதுவரையில் குல்லா போடும் வழக்கமே என்னிடம் கிடையாது. மகாத் மாவிடம் எனக்குள்ள பக்தியை மற்ற வழிகளில் காட்டினால் போதும் என்று எண்ணியிருந்தேன். பைக்கும் தேவை இருந்ததில்லை. ஆனாலும் 'அகப்பட்டதைச் சுற்றடா ஆண்டி யப்பா' என்று தோண்டியப்பனின் உபதேசத்தை அநு சரித்து, குல்லாவைத் தலையிலணிந்து, பையையும் தோளில் மாட்டிக்கொண்டு ரெயிலுக்குக் கிளம்பினேன்.
ரெயிலேறியது திருச்சிராப்பள்ளி ஜங்ஷனில் என் னுடைய குல்லாவும் பையும் ஸ்டேஷனில் அநேகருடைய கவ ளத்தைக் கவர்வதைக் கண்டேன். முக்கியமாக, என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்த இரண்டு மனிதர் கள்மீது என் பார்வை விழுந்தது. அவர்களில் ஒருவர் சிறிது மூக்கு நீண்டவர், ரெயில் புறப்படும் சமயத்தில் சட்டென்று தாவிப் பக்கத்து வண்டியில் ஏறியதையும் கடைக்கண்ணால் பார்த்தேன்.