பேச்சின்பம் 43 வேறு விஷயங்களுக்குப் போகும்போது, நமக்குள் ருசி மாறுவதைக் காண்கிறோம். ஒவ்வொருவருக்கு ஒவ் வொரு விஷயத்தில் ருசி. சுப்பண்ணாவுக்கு அரசியல் சமா சாரங்களைப்பற்றிப் பேசுவதென்றால் பிடிக்கும். "என்ன ஸார்! இன்று பத்திரிகையில் விட்டல்பாய் படேல் என்ன போடு போட்டிருக்கிறார் பார்த்தீர்களா?" என்று கேட்பதற் காக, அவர் குப்பண்ணாவைத் தேடிக்கொண்டு செல்கிறார். குப்பண்ணாவுக்கோ அவரைக் கண்டதும் பரம சந்தோஷம். "ஆமாம்,மிஸ்டர் சுப்பண்ணா! இந்தச் சாஸ்திரியும், சாப்ரூ வும் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக்கூடாதோ? ஏன் இப்படி உளறு உளறு என்று உளறிக்கொட்டுகிறார் கள்?" என்பதாக ஆரம்பித்து விடுகிறார். இவ்விருவரும் பேச்சில் புகுந்துவிட்டால், வாயில் ஈ புகுந்தது தெரிவு தில்லை. ரங்கசாமிக்கு இலக்கியங்களில் பிரேமை. பொன் சாமிக்கும் அப்படியே. திருவரும் சந்தித்துவிட்டால் போதும்; கம்பனுடைய பாட்டில் ஓர் அடியில் ஒரு சொல் லின் சுவையைப்பற்றிப் பேசத் தொடங்குவார்கள். அவ் வளவுதான்; புயல், பூகம்பம் இரண்டும் சேர்ந்தால்கூட அவர்களை அந்தப் பேச்சிலிருந்து வேறு விஷயத்திற்குத் திருப்ப முடியாது,
ஆச்சு! டிசம்பர் மாதம் பிறந்துவிட்டது. இனிக் கொஞ்சநாள் சென்னை நகரமெங்கும் கும்பல் கும்பலாக ஜனங்கள் கூடிப் பேசுவதைக் காணலாம். வீட்டிலும், வெளி யிலும், டிராமிலும், பஸ்ஸிலும், கடற்கரையிலும், எலக் ட்ரிக் ரெயிலிலும். கிளப்பிலும், ஹோட்டலிலும் ஜனங்கள் கூடிக் கூடிப் பேசுவார்கள். இந்தக் கும்பல்களில் ஒன்றில் நுழைந்து என்ன பேசுகிறார்களென்று கேட்டால், புது மனிதர்களுக்கு ஒன்றுமே புரியாது. சீட்டாட்டப் பிரியர்கள் இருக்கிறார்கள். நான் இஸ்பேட்டைத் தள்ளினேன். அவன் கிளாவரை எறிந்தான்.