உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் தெரியுமா? நான்தான்! சில கேள்விகள் கேட்டிருப்பது உதாரணமாக. 5$ கஷ்டம் அளிக்கிறது. 'பத்திரிகைகளில் பிரசுரிக்கும்படியாக எழுதுவதற்கு வேண்டிய யோக்கியதை என்னிடம் இருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறாய், தம்பி ! இது தர்மமா?எனக்கு எப்படித் தெரியும்? யாருக்குத்தான் எப்படித் தெரியும்? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யார் கண்டது? உண்மையில், யோக்கியதையைப்பற்றிக் கவலையே வேண்டிய தில்லை. எழுத வேண்டுமென்னும் ஆவல் உனக்கு இருக் கிறதா என்பதுதான் கேள்வி. அந்த ஆவலை அடக்கிக் கொள்ள ஆனமட்டும் முயற்சி செய்து பார். அப்படியும் அது கேளாமல் பீறிக்கொண்டு கிளம்பினால் பேனாவை எடுத்துக்கொள். அப்புறம் உன் தலையில் எழுத்துப்போல் நடக்கிறது! து என்ன எழுதுவது?' என்று அடுத்தாற்போல் கேட் டிருக்கிறாய். தம்பி! இது ஒரு சுலபமான கேள்வி. ஆனால், முக்கியமான கேள்வி: ஜீவாதாரமான கேள்வி என்றுகூடச் சொல்லலாம். ஆனால் இதற்குப் பதில் கண்டுபிடிப்பது தான் எழுதும் வித்தையில் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு என்பது உனக்குத் தெரியுமா? பெரிய ஆசிரியர்கள் எல்லா ரும் இந்தக் கேள்விக்குப் பதில் கண்டு பிடிப்பதிலேயேதான் சிரமம் அடைகிறார்கள். உண்மையில், மேற்படி கேள்விக்கு இன்றைய தினம் நான் விடை கண்டுபிடித்திருந்தால். உனக்கு இந்தக் கடிதம் எழுதவே ஆரம்பித்திருக்க மாட் டேன். (நெருக்கடியான சமயத்தில் உன்னுடைய கடிதம் வந்து உதவிற்று என்று சொன்னதன் இரகசியம் இப்போது பிடிபடுகிறதா?) ஆனால் குறிப்பான, திட்டமான பதில் கண்டுபிடிப் பதில்தான் மேற்சொன்னவிதம் கஷ்டமேதவிர, பொது வாகப் பதில் சொல்வதில் கஷ்டமில்லை. என்ன எழுது வது?' ஏன்! எது வேண்டுமானாலும் எழுதலாம். மூட்டைப் பூச்சியிலிருந்து முஸோலினிப் பெரியார் வரையில், ஊர் வம்பிலிருந்து உலகப் பொருளாதார நிலைமை வரையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/50&oldid=1721434" இலிருந்து மீள்விக்கப்பட்டது