உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாதிக்கு ஸ்நானம் 73 முற்றத்தின் மூலையில் உட்கார்ந்து ஸ்நானம் செய்துவிட்டு வந்தார். லிருந்த ஏழு வயதுப் பெண் குழந்தையைக் கூப்பிட்டார். அம்மா! உனக்கு ஏதாவது சுரம், கிரம் வந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்டார். உட்கார்ந்து மழைத் தாரையில் அல்லாமலும் வீட்டி "குளிர்ந்த ஜலத்தில் குளிப்பேன்" என்றது குழந்தை. இதற்குப் பிறகு என் உயிருக்குத் துணிந்தேன். தும்மலுடன் வீட்டிற்குள் நுழைந்தவன், கொட்டுகிற மழையில் நேரே குழாயடிக்குச் சென்று உட்கார்ந்தேன். ஏறக்குறைய ஒன்பது மாதம் ஆகிறது. தினந்தோறும் தவறாமல் இரண்டு வேளை குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்து வருகிறேன். உயிரோடு இருக்கிறேன் என்பது வெளிப்படை. குளிர்ந்த ஜலம் வெற்றி பெற்றுவிட்டது! ஜலதோஷத் துக்குத் தோல்விதான்! அது முழுதும் நீங்கிவிட்டது என்று சொல்லவில்லை. இரண்டு மாதத்துக்கு ஒரு முறையா யிருந்து, மாதாந்தரமாகி, மாதம் இரு முறை, மும்முறை வாராந்தரம், வாரம் இரு முறை, மும்முறை எல்லாமாகிக் கடைசியில் தினசரியாகி இருந்த ஜலதோஷம் இப்போது மறுபடியும் பின்னோக்கிச் சென்று மாதம் ஒரு முறைக்கு வந் திருக்கிறது. இனி நான் வெந்நீரின் அடிமையல்லன். குளிர்ந்த ஜலத்தைக் கண்டு பயமே இல்லை. கொஞ்ச நாளைக்குமுன் எனக்கு இன்புளூயன்ஸா' காய்ச்சல் வந்தது. 104 டிகிரி வரையில் போயிற்று. இரண்டு தடவைக்குப் பதில் தினம் மூன்று தடவை குளிர்ந்த ஜலத் தில் முழுகினேன். மருந்து எதுவும் சாப்பிடாமலே சுரம் குணமாயிற்று. அச்சமயத்தில் ஒரு நாள் ஸ்ரீமான் முதலி யார் என்னைப் பார்க்க வந்தார். 'மூன்று தடவை போதாது. நாலைந்து தடவையாவது ஸ்நானம் செய்திருந்தால் இன்னும் சீக்கிரம் குணமாயிருக்கும்' என்றார். (1) சரியான உணவு அருந்துதல்; (2) மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுதல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/70&oldid=1721454" இலிருந்து மீள்விக்கப்பட்டது