பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 113 மண்ணுள் புதைத்துத் தன்னையே மறந்து வாழவேண்டிய நிலை இச்சிலைக்கு ஏற்பட்டதே என நினைத்து உண்மையில் வருந்தினேன். மக்களுள்ளும் ஒரு சிலர் சில காலத்தில் உயர்ந்து வாழவும் அவர்களே காலப் போக்கில் இருக்கும் இடம் தெரியாமல் நிலை கெடவும் காண்கின்றோம். கடவுளரும்-அவர் உருவம் தாங்கிய சிலைகளும் கூட இவ்விதிக்கு உட்பட்டனவே போலும் என நினைத்தேன். அந்தச் சிலையை அப்படியே விட்டுவைக்க எனக்கு மன மில்லை. அங்கே அந்தக் கோயிலிலோ யாதொரு பூசனையும் கிடையாது. எனவே அதை எப்படியாவது அப்புறப்படுத்தி நல்ல இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். நண்பர் பலருடன் பேசினேன். எங்கள் தெருக் கோடியில் ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் தனியாக அதைக் கொண்டு வந்து வைக்க முயன்றேன். பெரியவர்களில் சிலரும் அவ்வுருவத்தை வந்து கண்டபின் அதன் முகத் தோற்றத்தால் கவரப் பெற்றனர். பின்னர் அவர்களே முன்னின்று அதைக் கொண்டுவந்து மாரியம்மன் கோயில் தாழ்வாரத்தில் நிற்க வைத்தனர். அன்று முதல் நானும் என் நண்பர்களும் அதற்கு எண்ணெய் முழுக்கு முதலியன செய்து வந்தோம். விரைவில் அது கோயிலில் உள்ள திருமாலே என்னுமாறு அழகுடன் பொலிந்தது. பிள்ளைகளாகிய நாங்களே அதற்கு மாலைகள் இட்டும், பிற பண்டங்கள் படைத்தும், வேடிக்கை யாக விழாக்கள் நடத்தி வந்தோம். இதே முறையில் வேறு இரண்டொரு கற்சிலைகளும் கூட அந்த இடிந்த கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டு, சேர்த்து வைக்கப்பட்டன. என்றாலும் அந்தத் திருமால் சிலைக்குக் கிடைத்த பெருமை பிற சிலைகளுக்குக் கிடைக்கவில்லை என்னலாம். இன்று அந்தத் திருமால் சிலை எங்களுர் அம்பலவாணர் கோயிலின் வடக்குச் சுற்று வழியில் ஒரு முக்கியமான இடத்தில் ஆ- 8