பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை - - - 175, புறத்தில் தங்கி இருப்பதாகவும் சொன்னார்கள். நான் உடனே ஒடினேன். அவர்கள் என்னைக் கட்டிக்கொண்டு கதறினார்கள். அன்றுதான் நான் முதல்முதலாகப் பல்கலைக் கழகத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தேன்-நான் சம்பாதித்ததாக எண்ணிய நிலையில் வந்தது அது. அதை அன்னையார் கையில் வைத்து வணங்கி எழுந்தேன். அன்னையார் கண்கள் குளமாயின. முதல் முதல் பிள்ளை சம்பாதித்ததைத் தன்சையில் பெற்றதை அத்தாய் உள்ளம் எண்ணிற்று போலும். மறுமுறை கட்டி அணைத்தார்கள். அந்தத் தொகையை அப்படியே ஆண்டவனுக்கு உரிமை யாக்கி விட்டார்கள். பிறகு அவர்கள் சிதம்பரத்திலேயே சில நாட்கள் தங்கி இருந்து ஊர் திரும்பினார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் பயின்ற போது பல நல்லாசிரியர்கள்-சிறப்பாகத் தமிழ்ப் பேராசிரியர் கள்-ஆக்கப்பணி புரிந்திருந்தனர். ஒவ்வொரு துறையிலும் வல்லவர் தலைமைதாங்கி நடத்தினர். நான் தமிழ் மாணவ னாக இருந்தமையின் ஒருசிலரைத் தவிர்த்து மற்றவர்களோடு அதிகமாக நெருங்கிப் பழகவில்லை. ஆயினும் தமிழ்ப் பேராசிரியர் அனைவருடனும் நன்கு கலந்து பழகினேன். அவர்களும் எனக்கு வேண்டிய வகையில் எல்லாவகையான உதவிகளையும் செய்தார்கள். இரண்டாண்டுகள் அண்ணா ೧ುಖಿಸು நான் பயின்றபோது நான் பெற்ற அனுபவங்கள் Ꭵ !Ꮆb) ! நான் பயிலத்தொடங்கிய முதலாண்டில் விபுலானந்த அடிகளார் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். அவருக் குப் பின் இருந்த ஒவ்வொரு பேராசிரியரும் சிறந்த கல்வி அறிவும் தெளிந்த சிந்தையும் செம்மை ஒழுக்கமும் பெற்றவர் களாகவே திகழ்ந்தனர். திரு. ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் திருக்குறளிலும் கம்பனிலும் எங்களை மூழ்க வைத்தனர். நான் எப்போதும் போன்று ஒதுங்கி இருந்தபோதிலும், அவர் கேட்ட இரண்டொரு கேள்விக்கு நான் அளித்த விடைகள்