பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 - ஆனந்த முதல் ஆனந்த வரை அது என் வீடெனவே நின்றது. எனவே அதுவரை உத்தி யோகத்துக்கெனத் தனி உடையோ பிற ஆடம்பரங்களோ தேவை இல்லாதிருந்தன. சாதாரண 'ஜிப்பா அணிந்தே வாழ்ந்து வந்தேன். அக்காலத்தில் ஜிப்பா, கூலி உட்பட எட்டனாவில் அடங்கும். பாடி மூன்றணா, ஒரு வேட்டியும் துண்டும் எட்டணா. எனவே மிக எளிய நிலையிலேயே பலருடைய வாழ்க்கையும் அமைந்தது; என்னுடையதும் அப்படியே. எப்போதும் உடையிலோ பிறவற்றிலோ நான் எளிமையைக் கையாள அன்றே பழகிக்கொண்டேன். எனினும் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதால் கோட்டும் சூட்டும் அணிந்து, கிராப் வாரி விட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்றனர் அன்பர்கள். அதுவரை குடுமியாண்டி யாகவும், ஒட்டவெட்டிய மொட்டையனாயும் இருந்த நான் சில நாட்களில் கிராப்பு' சீவி சிங்காரிக்கும் நிலைபெற்றேன். இரண்டு சூட் தைக்க ஏற்பாடு செய்தேன். நல்ல துணியில் ஒரு சூட் முழுவதும் தையல் கூலியுடன் ஐந்து ரூபாய்தான். எனவே பள்ளிக்கூட முதல் நாளில் டை கட்டிக் கொண்டு சூட் அணிந்துகொண்டு வாலாஜாபாத்திலிருந்து இரெயில் வழி காஞ்சிக்குப் புறப்பட்டேன். வாலாஜாபாத்தில் உள்ள அனைவரும் என் புதுத் தோற்றத்தைக் கண்டு வியந் தனர். காஞ்சிபுரம் பள்ளியில் காலெடுத்து வைத்து முதலில் தலைமை யாசிரியரைக் கண்டேன். அவர் என் தோற்றத் தைக் கண்டு வியந்தார்; போற்றினார். அக்காலத்தில் தமி ழாசிரியர் சூட் அணிவதென்றால் அது ஆச்சரியப்படத்தக்க ஒன்று. எனவே என்னை மாணவரும் பிற ஆசிரியர்களும் ஏதோ காட்சிப் பொருளைப் போன்று கண்டு கண்டு சென் றனர். தலைமை யாசிரியர் மட்டும் அவ்வாறு வருதல்தான் நல்லது என அறிவுரை கூறினார்; முன்னரே அங்கிருந்த வயதான தமிழாசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி, அவ ருடன் செல்லுமாறு பணித்தார். அவரும் என்னை ஆசிரியர்