பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 ஆனந்த முதல் ஆனந்த வரை என்று பாடிய பாடல் என் நினைவுக்கு வந்தது. மதுரை சென்ற அன்று தொட்டு இன்று வரை அப்பரைப்போல் வாழ் கின்ற நான் அவர் தம் இப்பாடலை எண்ணி எண்ணி உளம் உருகியதுண்டு. 'என் சிந்தையானே' என்று அப்பரடிகள் பாடியபடி எப்போது நான் பாடி, இறைவனை என் சிந்தையுள் கட்டிப்பிடிப்பேன் என்று நினைத்து நினைத்து இதைப் பாடுவதுண்டு. இவ்வாறே திரு. மாணிக்கவாசகம் செட்டியார் அவர்களும், இருவர்தம் கான்முளைகளாகிய சொக்கலிங்கம், தியாகராசன் ஆகியோரும் அவர்தம் கார்களில் பல சுற்றுப்புற இயற்கை இலங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதுண்டு. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பற்றி என் வையைத் தமிழில் எழுதியுள்ளேன். செல்வர் சொக்கலிங்கம் நான் அமெரிக்கா சென்றஞான்று, அங்கே காவாய்த் தீவில் உள்ள சைவ சித்தாந்தமடத்தில் அவர் மகளுடன் நான்கு நாட்கள் தங்கி இருந்து, அங்கும் என் அன்பு மாணவனாகவே இருந்ததை நினைவு கூர்கின்றேன் (நான் தியாகராசர் கல்லூரியில் இருந்தபோது அவர் அங்கு மாணவராகப் பயின்றார்) - நான் மதுரையில் இருந்தபோது என் உடனின்று உற்றுழி உத்விய ஒரு சிலரையும் இங்கே நினைக்கக் கடமைப்பட்டுள் ளேன். கல்லூரி முதல்வர் இராமநாதப்பிள்ளை நான் இருந்த போது அன்புடன் அரவணைத்துச் சென்றார். நான் இருந்த வீட்டின் பக்கத்திலேயே அவர் இருந்தமையின், கல்லூரிக்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் அவர் காரிலேயே அழைத்துச் செல்வார். வருவோர் பலருக்கும் என்னை அறிமுகப்படுத்திவைப்பர். அவர் மகனார் சென்னையில் இருந்தவர், பிறகும் அடிக்கடி என் நலன் விசாரிப்பார். நான் வந்த உடனேயே திரு. இராமநாதப்பிள்ளை அவர்களும் ஒய்வு பெற்று சென்னைக்கே வந்துவிட்டனர். நான் விட்டு வந்த போது எனக்கு ஒரு நல்ல சான்றிதழும் தந்துள்ளனர்.