பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 ஆனந்த முதல் ஆனந்த வரை அதில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற, அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சரானார்கள். இடையில் சென்னை வந்த நான் அவர்களைச் சென்று கண்டேன்’ அவர்கள் இளமை முதல் எனக்கு உற்றவர்கள். நான் தொடங்கிய வாலாஜாபாத் பள்ளிக்கு இரு நாடகங்கள் நடித்துப் பொருளுதவி செய்தவர். காஞ்சியில் அடிக்கடி கண்டு மகிழ்ந்தவர். 1938இல் என்தேர்தலில் மாட்டு வண்டி யில் வந்து எனக்காக ஒட்டு கேட்டவர். அவர் என்னைக் கண்டதும் உங்களுக்கு இங்கே நிறைய வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு முடிந்தவுடன் மே மாதத்தில் திரும்பிவந்து விடுங்கள் என்றார். நான் என்ன சொல்லுவாரோதொடர்ந்து இருக்கச் சொல்லுவாரோ என்ற அச்சத்தோடு சென்றேன். அவர் என் கருத்துப்படியே வரப்பணித்ததைக் கேட்டு மகிழ்ந்தேன். ஆம்! அவர் முதலமைச்சராக இருந்து தமிழுக்கும் தமிழருக்கும் பலப்பல செய்ய எண்ணினார். நாடும் நாமும் கொடுத்துவைக்கவில்லை. மிகச் சில நாட்களே முதல்வராக இருந்து மறைந்தார். . அவர்கள் முதல் அமைச்சரானபோது, அவர் பச்சை யப்பரில் பயின்றவராதலால் அவருக்கு ஒருபெரும் பாராட்டு நடத்தினர். பாராட்டு விழாவில் அண்ணா அவர்கள் இக்கல்லூரியில் இதுவரையில் எல்லாத் துறையினரும் முதல்வராக வந்திருக்கிறார்கள். தமிழாசிரியர்தான் வர வில்லை என்றாராம். என்னைப் பற்றித்தான்.அவர் சொன் னார் என அதைக் கருத்தில் வைத்தே பின் பச்சையப்பன் அறநிலையத்தார் என்னை உயர்த்தினர். கல்லூரி முதல் வரும் துணைமுதல்வரும் என்னினும் இளையவர். எனவே புதியதாக மற்றொரு துணைமுதல்வர் பதவியை உண் டாக்கினர். எனக்கு அப்போது வயது 58. எனவே அந்தப் புதிய பதவியில் என்னை இருத்தி, தொடர்ந்து என் அறுபத்