பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - ஆனந்த முதல் ஆனந்த வரை தடுக்க நினைத்தார்கள். நான் அவர்கள்ையும், அவர்கள் முன்னோர் கட்டிய வீட்டையும் பிற நிலபுலங்களையும் விட்டுச் செல்லலாகாதே என்ற காரணத்தால் நான் படிக்க வேண்டாம் என்றார்கள். நான் வாலாஜாபாத்தில் மூன்றாவது பாரம் தேறினால் மேலே படிக்கச் செங்கற்பட்டு செல்கிறேன்; இன்றேல் நின்று விடுகிறேன்’ என்றேன். ஆகவே அவர்கள்-நான் படிக்க வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபட்ட அன்னையார்-அன்பின் காரணமாக என்றும் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற பாசத்தாலே நான் தேர்வில் வெற்றி பெறக்கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டுவார்கள். தேறினால்தானே வெளியூர் செல்வான்; இல்லாவிட்டால் இங்கேதானே இருப்பான்’ என்று கருதிற்று அவர்கள் அன்புள்ளம். ஆயினும் நான் தேறி மேலே படிக்கச் செல்லும்போது, தான் தனியாக வீட்டில் இருந்து கொண்டு, ஊரில் பயிர் பச்சைகளைப் பார்த்துக் கொண்டு, பாட்டி யையும் என்னுடன் அனுப்பி என் படிப்புக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். நான் வாலாஜாபாத், செங்கற்பட்டு முதலிய ஊர்களில் படிக்கச் செல்லும்போது தந்தையாரோ, பெரிய தந்தையாரோ ஒருவரும் முன் வந்து உதவவில்லை. அம்மாவே யார் யாரையோ பிடித்து என் படிப்புக்கு வழிகாட்டச் சொன்னார்கள். பின் நான் படித்துக் கற்றோர் அவையில் முன்னின்று பல ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றுவதையெல்லாம் கண்டபோது அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள். - 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்று வள்ளுவர் குறளுக்குச் சான்றாக நின்றார்கள். அவர்கள் என்னைத் தாயின் அன்போடு வளர்த்தார்கள். தந்தைக்குரிய கல்வி பயிற்றுவிக்கும் பணியில் தலைநின்றார் கள். அரசனைப் போல் தவறு செய்யும்காலைத் தண்டித்