பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆனந்த முதல் ஆனந்த வரை போட்டுக் கட்டடம் கட்டுவதாகவே கிராமத்தார் நினைத் தார்கள். அதுவரையில் அரசாங்கம் செலவு செய்து கட்டிய கட்டடம் ஒன்றும் ஊரில் இல்லையாதலால் அவர்களுக்கு ஒரே அதிசயமாகவே இருந்தது. மக்களிடத்தில் இருந்து வாங்கும் வரிப் பணத்தில் ஒரு பகுதியே இப்படி எத்தனையோ ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டடமாகவும், கால்வாய்த் துப்புரவாகவும். பிறவாகவும் வருகின்றது என்பதை அன்று அவ்வளவாக மக்கள் அறிய மாட்டார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமமும் தங்கள் வரிப்பணத்தில் பங்கு கேட்டுத் தத்தமக்கு வேண்டிய வசதிகளைச் செய்ய முன் நிற்கின்றது. அதற்கெனவே அரசாங்கமும் பஞ்சாயத்துச் சபைகள் அமைத்து அவற்றின் வழியே ஆண்டு தோறும் வரிப் பணத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து உதவு கின்றது. ஆனால் அந்தக் காலத்தில்எல்லாம் பஞ்சாயத்துச் சபைகள் ஊர்தோறும் கிடையாது. நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பெற்றது. அல்லி அர்ச்சுனா’ என்ற நாடகமே அது. அந்தக் காலத்தில் சில சில சிறிய கம்பெனிகள் நாடகம் நடத்துவதாக ஊர் தோறும் வந்து மாட்டுக் கொட்டகைகளை வாடகைக்கு எடுத்து ஒரு சில நாடகங்களை நடத்திச் செல்வார்கள். அந்த நாடகங்களைப் பாட்டுகளுடன் அச்சிட்டுச் சிலர் விற்றுப் பணம் சம்பாதித்தார்கள். அப்படி அச்சேறிய நாடகங்களுள் 'அல்லி அர்ச்சுனா'வும் ஒன்று பாரதக் கதையில் இல்லாத ஒரு புது நாடகம் இது. சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் இப்படி எத்தனையோ நாடகங்கள் எழுதப் பெற்றன போலும், பெரிய புராணத்தில் இல்லாத புனைந்துரை பெற்ற நந்தனார் சரித்திரம் கோபாலகிருஷ்ணபாரதியாரால் கீர்த்தனை வடிவத்தில் வெளிவந்துள்ளதை அனைவரும் அறிவர். அக்