பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#30 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

"எல்லாவற்றையும் எனக்காகவும், சுகபோகத்துக் காகவும், பகட்டு, படாடோபத்துக்காகவும் செலவிட்டால் நான் திருடன் ஆவேன்'.

'பகவானுக்குத் தருவதென்றால், என்ன பொருள்? அறச் செயல்களுக்காகச் செலவிட வேண்டும் என்பதே பொருள்.

"நான் பிறருக்கு என்ன கொடுக்கிறேன் என்பதற்குக் கணக்குக் கிடையாது. பரோபகாரம் செய்ய வேண்டியது தர்மம்; அண்டியவரை ஆதரிப்பது மகா தர்மம்; ஆனால், சகோதர சகோதரிகளுக்குத் தருவதால் கணக்குத் தீராது."

'இந்தக் கெட்டக் காலத்தில், நாடு முழுவதுமே உதவி கோரி என் வாயிலில் நிற்கிறது. இந்த நாட்டில் எனக்கு முப்பது கோடி சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் உணவின்றிச் சாகின்றார்கள். பலர், துன்பங்களிலும், இன்னல் களும் செக்குமாடுகளைப் போல சுற்றிச்சுற்றி உயிர் வாழ் கிறார்கள். அவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டாமா?"

"யாருடைய பாக்கியத்துடன் உனது பாக்கியம் பிணைக்கப் பட்டுள்ளதோ, அந்த மனிதன் விசித்திரமானவன். இந்த நாட்டில், இந்தக் காலத்தில், எந்த மனோபாவத்தோடும், நோக்கத்தோடும், வாழ விரும்புகிறார்களோ, அவற்றுக்கு நேர் மாறான மனோ பாவமும், நோக்கமும் உடையவன் நான், முற்றிலும் மாறு பட்டவன்; அசாதாரணமானவன்'.

"இந்தக் கருத்துக்களை எல்லாம் மக்கள் பைத்தியக்காரத் தனம் என்பார்கள். ஆனால், பைத்தியக்காரன் காரியத்தில் வெற்றி பெற்றால் அவனைத் தேஜஸ்வி; மகா புருஷன் என்று போற்று கிறார்கள். ஆனால், இவர்களில் எத்தனைபேர் முயற்சி வெற்றி பெறுகிறது?"

"ஆயிரக்கணக்கான மனிதர்களில் பத்து மனிதர்களே அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பத்தில் ஒருவனே எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகிறான்."