பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆன்மீக ஞானிகள் 'அன்னை - அரவிந்தர்” என்ற இந்த நூலை, அன்னை பதிப்பகத்தின் வெளியீடாக வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

உலகம் போற்றும் "ஆன்மீக ஞானிகள், அன்னை - அரவிந்தர்” எனும் அருளாளர்கள் வரலாறும். அவர்கள் நிறுவிய அரவிந்த ஆசிரமும் ஆன்மீகத் தொண்டுகளின் மாண்பும், ஆன்மீகப் புரட்சியைச் செய்து வருவதைத் தமிழக மக்கள் அறிவார்கள். அத்தகைய ஞானிகளின் தெய்வீக அற்புதங்கள் பல இந்த நூலிலே இடம்பெற்று நூலின் பெருமையை மேலும் உயர்த்துகின்றன.

தமிழ் ஆன்மீக உலகம் இந்த நூலைப் படித்து, மேலும் பயன் பெறுவார்கள் என்றே நம்புகின்றோம். இந்த நூல் ஆன்மீக உலகுக்கு ஓர் அருட்தொண்டு என்ற குறிப்பு நூலாகப் பயன்படும் என்ற எண்ணத்தில் இதனை வெளியிடுகின்றோம்.

அன்னை மீதும் - அரவிந்தர் பெருமான் மீதும் பற்றுள்ள தமிழ் நெஞ்சங்கள் இதற்கு ஆதரவு காட்ட வேண்டு கின்றோம்.

அன்புடன் வா. அறிஞர் அண்ணா