பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 77

ملاو &

ஆண்களும், பெண்களும், எல்லா தேசத்தவர்களும், சாதி, மத, தேச, இன, அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து, அமைதியாக, ஒற்றுமையாக, அன்புடன் வாழ்வதற்கான ஓர் அனைத்துலக நகரமாக அரோவில் இருக்க விரும்புகிறது. மனித இன ஒற்றுமையே அரோவில் நகர நோக்கமாகும். உலகத்தின் பரிணாமத்தில் மனிதன் கடைசி படி அல்ல. உலகத்தின் பரிணாமம் தொடர் கின்றது. மனிதனை விட உயரியதோர் இனம், தேவ இனம் - இங்கே தோன்றும். இந்த புது இனத்தின் வருகையில் பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கே தவிர இந்த அரோவில். பழையை உலகிலேயே திருப்தி உள்ளவர்களுக்கு அல்ல. சட்டத் திட்டங்கள், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாய், சுய விருப்பமாய் தன் அந்தராத்தமாவைக் கண்டு பிடித்து, இறைவனால் வழி நடத்தப்பட்டு, உயரிய தெய்வீக வாழ்க்கை வாழ முயல்வதே அரோவில் நகரின் நோக்கம் ஆகும். அந்த தெய்வீக இனம் எப்படியெல்லாம் இருக்கும், எப்படியெல்லாம் செயல்படும் என்பது நமக்கு இப்போது சரியாக விளங்காது. ஆனால், அதை அடைவதற்கு மிகச் சிறந்த முறை நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொள்வதே' என்று அன்னை அவர்கள் அறிவித்தார். உலகத்தின் நீண்ட நெடும் வரலாற்றில் நாம் இன்று ஒரு அசாதாரமான வேளையில் வாழ்கிறோம். இது இறைவனின் வேளை.

இத்தகைய வேளைகளில், பழைய அடிப்படைகள் ஆட்டம்

கண்டு விடுகின்றன. எங்கும் குழப்பம் ஏற்படுகின்றது. ஆனால், எதிர்காலத்தை நோக்கி பாய்ந்து முன்னேற விரும்பு கிறவர்களுக்கு இப்போது அற்புதமான வாய்ப்பு உள்ளது.