பக்கம்:ஆப்பிள் பசி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்பக்கம் இரண்டாம் கட்டிலிருந்து ‘தொம் தொம்’ என்று நெல் குத்தும் ஒசை, வீடெங்கும் நிறைந்திருந்த தானிய மூட்டைகளைக் கண்ட சாமண்ணாவின் உள்குரல்: “சுபிட்சமான பணக்காரக் குடும்பம் போலிருக்கு.”

யாரோ கனைக்கும் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த பாப்பா, ரேழியில் சாமண்ணா நிற்பதைப் பார்த்துவிட்டு ஆச்சரியம் கலந்து பூரிப்புடன், “உள்ளே வாங்க” என்றாள். மகிழ்ச்சிப் பெருக்கில் உள்ளம் சிறகடித்தது.

இதற்குள் அவள் தோழி அலமேலு கொல்லைப்புறத்து வழியாக ஓட்டமாய் ஓடி மறைந்து விட்டாள்.

“அப்பா இல்லையா?”

“பனங்கா வெட்டி வரப் போயிருக்கார். இப்ப வந்துருவார். அம்மா பின் கட்டிலே இருக்காங்க” என்றாள் பாப்பா.

சாமண்ணாவின் உள்குரல்: ‘அம்மாவா? எந்த அம்மா? யாரைச் சொல்றா?’

“ஓடறாளே, அந்தப் பெண் யாரு?” என்று கேட்டான்.

“அடுத்த வீடு, என் சிநேகிதி. கூடப் படிச்சவ. வாங்க, இப்படி வந்து உட்காருங்க” என்று அழைத்து ஊஞ்சலைக் காட்டினாள். “எங்களை மறந்துட்டீங்களோன்னு நினைச்சோம். இத்தனை நாளா எங்க போயிருந்தீங்க?” நானும் அப்பாவும் உங்களைத் தேடி ஒரு தரம் டவுனுக்குக் கூடப் போய்ப் பார்த்தோம். சரியான தகவல் எதுவும் கிடைக்கலே, டிராமாலயும் உங்களைக் காணலே.....” என்று கூறியவள் தாகத்துக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தாள். “எங்க ஞாபகமே வரலையா, உங்களுக்கு?”

“உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறதா அந்த ஓட்டர் ஐயர்கிட்ட போய் வத்தி வச்சிருக்கான் காதர்பாட்சா. அதைக் கேட்டுட்டு அந்த ஓட்டல்காரன் என்னைக் கண்டதும் ஒரேயடியா எகிறிக் குதிச்சான். அவன் மகளை அந்த அரைப் பைத்தியத்தை என் தலையில் கட்டிடணும்னு காத்திருந்தவனுக்கு இது ரொம்ப ஏமாற்றமாயிட்டுது. நான் அன்னைக்கு உங்களை வழி அனுப்பிச்சுட்டு ஓட்டலுக்குப் போனதும்...

‘ஏண்டா, அந்தத் தேவடியாச் சிறுக்கியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறயாமே! இதுக்குத்தான் உனக்கு இலவசமா வீடு கொடுத்து வச்சிருந்தனா? கூத்தாடிப் பயலே! உனக்கு வேறு யார்ரா பெண் கொடுப்பாங்க? தாசி மகதான் கிடைப்பாள்’ என்று கேலியாகச் சிரித்தான். அதைக் கேட்டதும் எனக்கு ரோசம் பொத்துக்கிட்டது. ரத்தம் கொதிச்சுது. பேயா மாறிட்டேன்.

‘ஏண்டா ஓட்டல்காரப் பயலே! என்ன சொன்னே? நாக்கை அடக்கிப் பேசு! பணத் திமிரா?’ன்னு பதிலுக்குக் கேட்டு-

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/31&oldid=1029136" இலிருந்து மீள்விக்கப்பட்டது