உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

_

களையும் இல்லை தோலும் இல்லை

முடிமேல் அடி

"இதனை ரட்சித்தாரடி இரண்டும் என் முடிமேலின'

  • - இத்தொடர் கல்வெட்டு ஒன்றின் ஈற்றில்

அமைந்த தொடர்,

சென்னை-திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி கோவில் கட வுளுக்கு இரவு அமுதுபடைப்பில் முட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்குத் தந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் ஆட்சியில் அலுவலனாக இருந்த புகழ்த்துணை விசயதரையன், நெல்லும் பொன்னும் வழங்கி ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தினான். அதைக் குறிக்கும் கல்வெட்டின் ஈற்றுத்தொடரே மேலே குறிச் கப்பட்டுள்ளது.

இதன் பொருள் : இந்த அறத்தைக் காலமெல்லாம் பேணிக் காத்துச் செய்து வருவோரின் அடிகளை என் தலைமேல் கொண்டு வணங்குகின்றேன்' - என்பது, கடவுள் திருவடியை முடிமேல் கொள்ளும் ஒர் அலுவலன், மாந்தன் காலைத் தலை யில் கொண்டு வணங்க முன்வந்தான். தான் வகுத்த நல்லறம் தொடர்ந்து நிகழவேண்டும் எனும் பேரார்வம் அவனை அவ்வ ளவு பணிய வைத்தது. அவ்வறம் என்ன வாயிற்று?

சுளை இல்லை

விசயதரையனது வேண்டுகோள் மாற்றுமுறை ஒன்றால் நடைமுறையாகியுள்ளது. அக்கல்வெட்டு அமைந்த கல் அக் கோயில் கருவறை வழியில் தள வரிசைக் கல்லாகக் கிடக் கிறது, போவோர் வருவோர் அடி அதன் முடிமேல் படுகிறது. இஃது எத்துணை அவலம்!

1. Epigraphica Inüica VoJ. VIII P, 296