2 புதையலும்
முருகு - ஒர் எழுச்சிச் சொல்: கம்பர் முருகு காதலின்'
என்று இப்பொருளை அமைத்துப் பாடுகின்றார்.
முருகப் பெயர்கள்
மணமும் அழகும் இளமையும் எழுச்சியும் புதுமையும்பொலிந்த ஒரு பெருமகன் தமிழ் நிலத்தில் வாழ்ந்தான். அவன் 'முருகன்' எனப்பட்டான். அம் முருகன் மக்கட்குப் பற்றுக்கோடாக விளங்கினான்; திரட்சியுள்ள தூண் போன்று திகழ்ந்தான்: களிற்றையும் பிணைக்கும் வல்லமைகொண்ட வீரனாக விளங் கினான். பற்றுக்கோடு, திரட்சி, தூண் என்னும் பொருள்கள் செறிந்த 'கந்து' என்னும் சொல்லால் கந்தன்' எனப்பட்டான்.
அவன் சிவந்த உடல் நிறத்தினன். அதனால்
செய்யோன்-சேயோன்’ ஆனான் .
அவனது படை வன்மை வேலால் வெளிப்பட்டது. வேல் எறிதலில் வல்லவன். அதனால் வேலன்' எனப்பட்டான்.
இத்துணைச் சிறப்புக்களும் நிறைந்த அவன் யாவராலும் விரும்பப்பட்டான். மக்களது உள்ளங் கவர்ந்த செம்மலாக விளங்கினான். எனவே 'வேள்', 'செவ்வேள்’’ எனப்பட்டான். கிழான்
மாந்தன் என்னும் பூண்டு மலையில் முளைத்தது. அது தளிர்த்துத் தழைத்துப் பல்கிப் பெருகிப் பழக்க வழங்கங்களைக் கொண்டது; பண்பட்டது; மேம்பட்டது. மனம் போன பழக்க வழக்கம் போய், மனம் ஒன்றிய மரபு கொண்டோர் பொது மக்கள் என்னும் குடிமக்கள் ஆயினர். பண்பட்ட குடிமக்கள் சான்றோர் ஆயினர். வாழ்வாங்கு வாழ்ந்தவர் வையத்து வாழ் வாங்கு வாழ்ந்து ஈடும் எடுப்பும் இன்றித் தனி மேம்பாட்டுத் தன்மை கொண்டனர். அன்னார் தெய்வமாக்கப்பட்டனர்; தெய்வம் எனப்பட்டனர்.
'வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
6 . கம்பரா : ஆகவிகை : 54 - 1