உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 13

மரை என்பது காட்டுக் குதிரை." காட்டுக் குதிரை நிறைந்திருந்த காடு மரைக்காடு’

எனப்பட்டது. தற்காலத்தும் அக்காட்டில் குதிரைகள் உள்ளன. அஃதே ஊர்ப்பெயராயிற்று. விலங்குகளின் பெயரால் கா, காடு பெயர் பெறுதல் இயல்பான வழக்கு ஆனைக்கா போல. -

மறையின் பெயரால் காடு பெயர் பெறுதல் பொருந்தாத ஒன்று. ஆனால், ஆயிரம் ஆண்டுகளாகப் பொருந்தி வந்தது எவ்வாறு? மொழிச் செருகல் பொருந்தாதையும் பொருந்த வைக்கும் என்பதற்கு இஃதொரு சான்று. வேதாரணியம் என்னும் வடமொழியைச் செருகி மரைக்காட்டை உருவியதையும் நோக்க வேண்டும்.

செருகல்

இவ்வாறு வடசொல்லை மொழிமாற்றாகச் செருகினர். அச்சொற்கு ஒரு தெய்வத் தகுதி கூறினர். அதில் வீழ்ந்த தமிழ்ப்புலவர் கைகுவித்து வணங்கி, அச்சொல்லை ஆண்டனர். காலப் போக்கில் மூலத் தமிழ்ச் சொல் ஆளுகையற்றுத் தானாகவே உருவிக் கொண்டது.

இச்செயல் திட்டமிட்டு நிகழ்ந்தது. மொழிச் செருகல் மொழி ஆளுமையாயிற்று. இருக்குமறைக் காலம் முதல் இச் செருகல் தொடங்கியது. சங்கப் பாடல்களில் அள்ளித் தெளித் தாற்போல் இச்செருகலைக் காண்கிறோம்.

மொழிச் செருகல் பையப் பையத் தமிழ் மரபுகளை மாற் றிற்று. நல்ல இன் மரபுகளைப் புரட்டிப் போட்டது. இம் மாற்றம் வலுப்பெற்றதைச் சிலப்பதிகாரம் நன்கு அடையாளம் காட்டுகின்றது.

சங்க காலத்தில், "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்'

2, பின் 24 9 ெ

3. புறம் 9-1