பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 3 ].

இந்நிலை என்றால் என்ன ஆவது? இவற்றைக் கண்டு மனம் புழுங்கிய பரிதிமாற்கலைஞர்,

"தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே தாமே அறிந்தன போலவும் வடமொழியினின்றுமே தமிழுக்கு அவை வந்தன போலவும் காட் டினர் ' என்று எழுதிய கருத்து இன்றும் நினைவுகூரத்தக்கதாக உளது.

‘இன்றும் நினைவுகூருமாறு நிலை என்ன? என்று வினவ லாம். ஒரு சில காணலாம்.

புதுச்சேரி மாநில வானொலியில் இந்திப் பாடவகுப்பில் அதன் ஆசிரியர் ஒரு தொடரை மொழிபெயர்ப்பிற்குத் தந்தார். அத்தொடர் 'தமிழ் மொழி இனிமையானது இல்லை' என்பது. இதன் உள்நோக்கத்தை எவ்வாறு கணிப்பது? தமிழ்' என்னுஞ் சொல்லுக்கு ‘இனிமை' என்று பொருள் என்னும் தமிழ் மண் னில், ஒரு வடநூல்வழி இந்தி ஆசிரியர் நாட்டு மக்கட்கு ஒலி பரப்பினார். இது 28-8-78 நண்பகல் 1 மணி நிகழ்ச்சி.

மூன்று திங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு வடநூல் வழித் தமிழாசிரியர்,

'தமிழ் காலப்போக்கில் உலகில் மறைந்து போகும்; வடமொழிதான் நிலைத்து நிற்கும்' என்று பொதுமேடையில் பேசினார். செய்தித்தாள்களில் படித்த தமிழர்களாக உள்ளோம்.

'மிகவும் விரைவிலே தமிழ் ஒளி உலக முழுவதிலும் பரவா விட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள் இப்படி ஒர் அழுத்தமான தொடர். கவிமா மன்னன் பாரதி மொழிந்தது. பாரதி நூற்றாண்டு விழாக்கள் நடக்கின்ற காலம். பாரதி வந்தால் அவன் பெயரை மாற்றி அழைக்கவும் தயங்கப் போவ தில்லை என்று தான் சொல்ல வேண்டும், -

14. தமிழ்மொழி வாலாறு: பக். 15

15. பாரதி பா :