பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில் தோன்ற அவருடைய உள்ளம் ஒரு கற்பனையை அமைத்தது. பொது மகளிரின் மார்பு மலைபோல் காணப்படுகிறது என்று கற்பனை செய்கிறார் (604). தனித்தனியே கண்ட வேறுவேறு பகுதிகள் சேர்ந்து ஒரு முழுமை பெற்றதை இக் கற்பனையில் நாம் காணலாம். இதனைப் படைப்புக் கற்பனை என்பர்.

இயைபுக் கற்பனை

உணர்ச்சி ஒற்றுமையால் இயைத்து அமைக்கப்படும் கற்பனை இயைபுக் கற்பனை எனப்படும். இராக்கதர்களை அழித்த காட்சியினை, பாலை வற்றக் காய்ச்சும்போது, அப்பால் எவ்வாறு கொதித்தெழுமோ அவ்வாறு எட்டுத் திசைகளிலிருந்தும் சீறிவந்த இராக்கதர்களை வென்ற வேற்படை என்கிறார் (521). பால் கொதிக்கும் காலத்தில் அவருடைய உள்ளத்தில் எத்தகைய உணர்ச்சி தோன்றியதோ அதே உணர்ச்சி முருகப்பெருமானது வேற்படையின் ஆற்றலை அவர் கற்பனை செய்யும் காலத்தில் தோன்றியது. இவ்வாறு உணர்ச்சி ஒற்றுமையால் இயைத்துக் கூறப்படுவதால் இதனை இயைபுக் கற்பனை எனலாம்.

கருத்து விளக்கக் கற்பனை

பொது மகளிர், மக்களின் பொருளினைக் கவர்ந்து அவர்கள் சிறப்பின்றிப் பொருளின்றி உருகும்படி செய்வார்கள். இக்கருத்தினை கடலிலிருந்து அமுதம் கடைந்தெடுப்பது போலவும், கரும்பினின்றும் சாறு எடுப்பது போலவும் பலாப்பழத்தினின்றும் சுளைகள் எடுப்பது போலவும் காமுர்கள் உருக என்று அருணகிரி நாதர் கற்பனை செய்கிறார் (653).

உணர்ச்சி

உணர்ச்சியில்லா இலக்கியம் உணர்ச்சியில்லா உடலினைப் போன்றதாகும், உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாட்டினையே மெய்ப்பாடு என்பர். தொல்காப்பியர் கூறும் எண் வகையான மெய்ப்பாடுகளையும் நாம் திருப்புகழில் கண்டு இன்புறலாம்.

132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/140&oldid=1426393" இலிருந்து மீள்விக்கப்பட்டது