பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ், இருளமொழி எண்ணுப்பெயர் திரு. ஆர். பெரியாழ்வார் அண்ணுமலேப் பல்கலைக் கழகம் இருளமொழியும் தமிழ்மொழியும் திராவிட மொழிக் குடும்பத் தைச் சேர்ந்தவை. இருளர் என்னும் நீலகிரி வாழ் பழங்குடி மக்களால் பேசப்படும் மொழி இருளமொழி. இவ்விரு மொழிகளி லும் காணப்படும் எண்ணுப்பெயர் பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம். ஒன்று முதல் பத்து முடிய அமைந் துள்ள எண்களைத் தனி நிலை எண்ணுப் பெயர் என்றும், பதினென்று முதல் உள்ள ஏனைய எண்களேத் தொகை நிலே எண்ணுப்பெயர் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். எல்லாத் திராவிட மொழிகளிலும் மேலே குறிப்பிட்ட முறையில்தான் எண்ணுப் பெயர்கள் அமைந்துள்ளன. கால், அரை, முதலாகிய கீழ்வாய் இலக்கங்கள் இங்கு எடுத்துக்கொள்ளப்பட வில்லே . தனிநிலே ஒன்று முதல் பத்துவரை உள்ள எண்களும், நூறு, ஆயிரம், இலட்சம், கோடி ஆகிய எண்களும் தனிநிலே எண்ணுப்பெயர் வகையில் அடங்கும். இருளமொழியிலுள்ள தனி எண்கள் பின்வருமாறு. ஒண்டு ←፰b፬ நூறு ரெண்டு/ரண்டு ஏளு ஆயிர/சாவிர மூண்டு எட்டு லச் ச நேலு ஒம்பது அஞ்சு பத்து 236.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/244&oldid=743373" இலிருந்து மீள்விக்கப்பட்டது